Friday, January 22, 2016

1400 years old mosque,The Cheraman Juma Masjid in Kodungallur,Kerala,India

1400 year old Cheraman Juma Masjid. creit; beautifulmosque.com
 Islam arrived in India particularly on the Malabar coast long ago before the Delhi Muslim rulers owing to frequent visits of Arab traders who had a monopoly in spice trades with the local rulers.
Prior to that the local people and the Muslims had been living in perfect communal harmony for centuries respecting each other's customs and religious practices.

Considered to be India's oldest mosque, the 1,400-year-old Cheraman  Juma  Masjid at  Methala  in Kodungalloor taluk, near Thrissur, Kerala was renovated on  June 29,2011 at an estimated cost of Rs 10 crores. It is world's second oldest mosque.
The Cheraman Juma Masjid in Kodungallur, believed to be the country's first and oldest mosque,  had to be restored to its original form. Its management committee was giving final touches to a renovation project  according to masjid president P.A. Mohammed Sayed.

 The 1400-year-old  historical mosque was reconstructed many times to accommodate the increasing number of believers. “The Cheraman Juma Masjid is a cultural monument and it should be preserved it in its original form,” said Mr. Sayed.
The mosque is believed to have been constructed in 629 AD by Malik Bin Dinar, a contemporary of Cheraman Perumal.
Legend has it that Cheraman Perumal, the Hindu ruler went to Mecca, met Prophet Mohammed, and at last embraced Islam. Perumal fell ill on the way back from Mecca. Malik Bin Dinar and a few others reached Kodungallur and showed the rulers, the letters written by Perumal about his new religious experience. Dinar and his associates were allowed to construct a mosque. When Dinar, who was the chief priest (Ghazi) of the mosque, left for Arabia, his nephew Habib Bin Malik took over.




The mosque was first renovated in the 11th Century AD, and later in 1974, Mr. Sayed said. “An extension was added after demolishing the front portion of the old mosque during renovation. The ancient part of the mosque, including the sanctum sanctorum, was left untouched.” It was renovated later in 1996, and in 2003, by adding extensions to accommodate more devotees, he said.
                                             credit; sharaonfacebook.net


Many non-Muslims conduct initiation ceremonies  here before sending their children to school.The mosque has an ancient oil lamp that always burns continuously  and is believed to be more than a thousand years old. People of all religions bring oil for the lamp as offering. Like most mosques in Kerala, this mosque allows  Non-Muslims for prayer.


 wikipedia.org/wiki/Cheraman_Juma_Masjid



Thursday, January 21, 2016

கான்: இறைத்தூதர் கொடுத்த இன்னொரு ஆயுதம்!

கான்: இறைத்தூதர் கொடுத்த இன்னொரு ஆயுதம்!

சமஸ்
Comment (36)   ·   print   ·   T+  
கான் அப்துல் கஃபார் கானின் 125-வது ஆண்டு இது. தன்னுடைய வாழ்நாளில் 27 ஆண்டுகளைச் சிறையில் கழித்தவர். அதில் 14 ஆண்டுகள், இந்திய சுதந்திரப் போராட்டப் பின்னணியில் அவர் அனுபவித்தவை. ஒரு லட்சம் பஷ்தூனியர்கள் அணிவகுத்த அஹிம்சைப் படையை உருவாக்கியவர். இந்தியப் பிரிவினையின்போது, “எங்களை ஓநாய்களிடம் வீசியெறிந்துவிட்டீர்கள்” என்று காந்தியிடம் கூறிவிட்டு, கலங்கிய கண்களுடன் விடைபெற்றவர். இந்தியாவில் ஒரு இடத்திலேனும் இந்த ஆண்டு கான் நினைவுகூரப்பட்டதாகத் தெரியவில்லை. அரசியல் அடையாள நிமித்தமாகவேனும் நேருவின் 125-வது ஆண்டைக் கொண்டாடிய காங்கிரஸ் கட்சி, கானை முற்றிலுமாகவே கைகழுவிவிட்டது. சரி, இந்திய முஸ்லிம்களே மறந்துவிட்ட ஒரு மாமனிதரை காங்கிரஸ் மறந்ததில் என்ன ஆச்சரியம் இருக்க முடியும்? ஆனால், இன்றைக்கு இந்திய முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் பல பிரச்சினைகளுக்குத் தீர்வளிப்பவராக கான் இருக்க முடியும்.
பஷ்தூன் கல் ஏன் துருப்பிடிக்காது?
பனிமலைகள், பள்ளத்தாக்குகள், பாயும் ஆறுகள், தூய பசுமை - இப்படியான பின்னணியில் வாழ்பவர்கள் பஷ்தூனியர்கள்.
மலாலா தன்னுடைய சுயசரிதை நூலான ‘நான் மலாலா’ புத்தகத்தில் குறிப்பிடும் விஷயம் இது:
“பஷ்தூனியர்களான எங்களிடம் ஒரு சொல்வழக்கு உண்டு. ‘பஷ்தூன் கல் துருப்பிடிக்காது’. இதன் பொருள் என்னவென்றால், நாங்கள் எதையும் அவ்வளவு சீக்கிரம் மறக்கவோ மன்னிக்கவோ மாட்டோம் என்பதே.”
பஷ்தூனியர்களின் இந்த முரட்டு இயல்புக்குப் பின் நீண்ட வரலாறு உண்டு. காலங்காலமாகப் படையெடுப்புகள், போர்கள், ஆக்கிரமிப்புகள், அடக்குமுறைகளை எதிர்கொண்ட பழங்குடிகள் அவர்கள். ஆங்கிலேய ஆட்சியிலும் அந்த அடக்குமுறை தொடர்ந்தது. இந்தியாவின் ஏனைய பகுதி மக்களுக்கு இருந்த உரிமைகள்கூட பஷ்தூனியர்களுக்கு இல்லை. ஆயுதம் இல்லாவிட்டால் பிழைத்திருக்க முடியாது என்பதையே வரலாற்று அனுபவமாகக் கொண்டிருந்த பஷ்தூனியர்கள் மத்தியில்தான் அஹிம்சையை ஆயுதமாகக் கொடுத்தார் கான்.
இன்றைய பாகிஸ்தானின் பெஷாவர் பள்ளத்தாக்கில் உள்ள உட்மான்ஸாயில் 1890 பிப்ரவரி 6 அன்று ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தார் கான். நல்ல வசதியான குடும்பம். கிறிஸ்தவ மிஷனரிகள் நடத்திய எட்வர்ட் மிஷன் பள்ளியில் அவரைச் சேர்த்திருந்தனர். அங்கிருந்த பாதிரியாரின் நல்லியல்புகள் கானிடம் பெரும் தாக்கத்தை உருவாக்கின.
முக்கியமாக, ஏழைக் குழந்தைகளுக்குக் கல்வி அளிப்பது எவ்வளவு மகத்தான சேவை என்பது. கான் நன்றாகப் படித்தார். ஆங்கிலேய ராணுவத்தில் சீக்கியர்கள், பஷ்தூனியர்களுக்கான படைப் பிரிவில் சேரும் வாய்ப்பு அவரைத் தேடி வந்தது. எத்தகைய உயர் பதவியில் இருந்தாலும், ஆங்கிலேயரிடம் நம் மக்கள் இரண்டாம்தரக் குடிமக்களாகவே இருக்க வேண்டியிருக்கும் என்பதை உணர்ந்த கான், அந்த மாயையிலிருந்து மீண்டார். மேற்படிப்புக்குத் தன்னுடைய அண்ணன் ஜஃபார் கான் மாதிரி லண்டன் செல்ல வேண்டும் என்று நினைத்தார். தாய்க்கு அதில் உடன்பாடு இல்லாத சூழலில், பின்னாளில் அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகமான ஆங்கிலோ ஒரியன்டல் கல்லூரிக்குச் சென்றார். விவசாயத்தை நோக்கித் திரும்பினார்.
கல்வி மந்திரக்கோல்
அரசின் அடக்குமுறை, மத அடிப்படைவாதிகளின் கட்டுப்பாடு ஆகிய இருமுனைத் தாக்குதலில் சிக்கியிருந்த பஷ்தூனியர்களைக் கல்வியால் மட்டுமே விடுவிக்க முடியும் என்று நம்பினார் கான்.
1910-ல் தன்னுடைய 20-வது வயதில் உட்மான்ஸாயில் ஒரு மசூதிப் பள்ளியைத் தொடங்கினார். பள்ளிக்கூடம் என்பதைத் தாண்டி சுதந்திரச் சிந்தனைகளை வளர்த்தெடுக்கும் சீர்திருத்தக்கூடமானது அது. அப்போது தொடங்கி, தன் வாழ்நாள் முழுவதும் பள்ளிக்கூடங்களை விதைக்கும் பணியைத் தொடர்ந்தார் கான். சமூகச் சீர்திருத்தங்களோடு புரட்சிகர இயக்க முனைப்புகளையும் கான் கொண்டிருந்ததால், அடுத்த ஐந்து ஆண்டுகளில் அந்தப் பள்ளிக்கூடத்தை மூடியது ஆங்கிலேய அரசு.
தொடர்ந்து, மக்களிடம் செல்வதை வழக்கமாக்கிக் கொண்டார் கான். 1915-1918-க்குள் தன் இனத்தவர் வசிக்கும் கைபர் பக்தூன்க்வா பகுதியில் உள்ள 500-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்குச் சென்றார். கரடுமுரடான மலைப் பகுதியில், எந்தப் போக்குவரத்து வசதியும் இல்லாத அன்றைய நாட்களில் ஒரு சில கிராமங்களைச் சென்றடையப் பத்துப் பதினைந்து மணி நேரங்கள்கூட ஆகும். பொருட்படுத்தாமல் நடந்தார். கிட்டத்தட்ட அங்கு வசிக்கும் ஒவ்வொருவரையும் சந்தித்துப் பேசினார். இதே காலகட்டத்தில் பிரிட்டிஷ் அரசுக்கு எதிரான, வழக்கமான முயற்சிகளின் தொடர் தோல்வி கானை யோசிக்க வைத்தது.
காந்தியீர்ப்பு விசை
இந்தியாவில் காந்தி சுடர்விட ஆரம்பித்திருந்த நாட்கள் அவை. காந்திய வழி அறப் போராட்டங்கள் கானை ஈர்த்தன. 1919-ல் அமைதி வழியில் அவர் ஒரு பொதுக்கூட்டத்தைக் கூட்டியபோது ஆயிரக்கணக்கில் மக்கள் திரண்டனர். கானை ஆங்கிலேய அரசு சிறையில் அடைத்தது. அவருடைய சொத்துகளைப் பறித்தது. எனினும், அவருடைய போராட்ட உத்வேகத்தைத் துளியும் குறைக்க முடியவில்லை. தொடர்ந்து ‘கிலாபத்’ இயக்கத்தில் தீவிரமாகப் பங்கேற்றார். சமூகச் சீர்திருத்தமே சுயராஜ்ஜியத்துக்கான ஒரே பாதை என்று கூறியவர் 1921-ல் ‘அன்ஜுமன் இ இஷ்லாஹ் இ ஆபகினா’ இயக்கத்தையும் 1927-ல் ‘பஷ்தூன் ஜிர்கா’ இயக்கத்தையும் தொடங்கினார். 1928-ல் ‘பஷ்தோ’ பத்திரிகையையும் தொடங்கினார்.
இவை அனைத்துமே சீர்திருத்தத்தை அடிப்படையாகக் கொண்டவை என்பதால், வெளியே மட்டும் அல்லாமல் சமூகத்துக்குள்ளும் கடுமையான எதிரிகளை கான் எதிர்கொண்டார். பெண் கல்விக்கும் பெண் சமத்துவத்துக்கும் அவர் முக்கியத்துவம் கொடுத்தார். “ஆங்கிலேயரிடமிருந்து நமக்கு விடுதலை வேண்டும் என்று கேட்பவர்கள் தம் வீடுகளில் பெண்களை எப்படி அடிமைகளாக நடத்துகிறோம் என்று எண்ணிப்பார்க்க வேண்டும்” என்றார். “குர்ஆனில் ஆண்களுக்கு நிகரான பங்கு பெண்களுக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. அல்லாவின் கட்டளையை ஆண்கள் புறக்கணித்ததன் விளைவாகவே பெண்கள் ஒடுக்கப்படுகிறார்கள்” என்றார். ஆடம்பரத் திருமணங்களையும் சடங்குகளையும் விமர்சித்தார். கடவுளின் பெயராலும் மதத்தின் பெயராலும் எந்த வடிவத்தில் அடிப்படைவாதம் நுழைந்திருந்தாலும் அவற்றைச் சாடினார்.
இறைத்தூதர் தந்த ஆயுதம்
ஒரே கடவுள்தான் இந்த உலகைப் படைத்தார் என்றால், எல்லா மக்களையும் அதே கடவுள்தான் படைத்தார் என்று ஆழமாக நம்பியவர் கான். சிறைக் காலத்தில் குர்ஆனோடு அவர் படித்த பைபிளும் கீதையும் கிரந்த சாகிப்பும் அவரை ஈர்த்தன. முஸ்லிம் மதத்துக்குள்ளும் சரி, வெளியிலும் சரி; இன/மத அடிப்படையிலான பேதங்களை முற்றிலுமாக அவர் நிராகரித்தார். தன்னுடைய அண்ணன் மகள் ஒரு சீக்கியரை மணம் முடிக்க ஆதரவு தந்தார். 1929-ல் லக்னோவில் காந்தியைச் சந்தித்தார் கான். இதைத் தொடர்ந்து சுதந்திரமான, ஒருங்கிணைந்த, மதச்சார்பற்ற இந்தியாவை உருவாக்கும் கனவுக்குப் பஷ்தூனியர்களின் பங்களிப்பாக அவர் உருவாக்கிய இயக்கம்தான் ‘குதாயி கித்மத்கார்’. பஷ்தூனில் ‘கடவுளின் சேவகர்கள்’ என்று பொருள்.
அஹிம்சையை அல்லா தந்த ஆயுதமாகவே பார்த்தார் கான். “நான் உங்களுக்கு வழங்கப்போகும் ஆயுதம் எப்படிப்பட்டது என்றால், அதன் முன் காவல் துறையோ, ராணுவமோ எதுவும் நிற்க முடியாது. இது இறைத்தூதரின் ஆயுதம். ஆனால், நீங்கள் அறியாத ஒன்று. பொறுமையும், நேர்வழியும்தான் இந்த ஆயுதம். உலகின் எந்த சக்தியாலும் இதற்கு எதிராக நிற்க முடியாது” என்றுதான் அஹிம்சையை அவர் அறிமுகப்படுத்தினார். தன்னுடைய இயக்கத்தில் சேர வந்தவர்களிடம் அவர் கேட்ட உறுதிமொழி: “நான் எந்தச் சூழலிலும் வன்முறையில் ஈடுபடவோ, பழிக்குப் பழி தீர்க்கவோ முனைய மாட்டேன். என் செல்வம், வாழ்க்கை, சந்தோஷம் எல்லாவற்றையும் இந்தத் தேசத்துக்காகவும் மக்களுக்காகவும் தியாகம் செய்வேன்.”
ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோரை உறுப்பினர்களாகக் கொண்ட வலுவான அறவழி இயக்கமாக உருவெடுத்தது ‘குதாயி கித்மத்கார்’. உப்புச் சத்தியாகிரகப் போராட்டம் நடந்துகொண்டிருந்த சமயத்தில், 1930 ஏப்ரல் 23 அன்று கான் கைதுசெய்யப்பட்டார். இதையடுத்து, பெஷாவரில் அறவழியில் எதிர்ப்புத் தெரிவிக்கக் கூடினர் ‘குதாயி கித்மத்கார்’ இயக்கத்தினர். அமைதியையே ஆயுதமாகக் கொண்டிருந்தவர்கள் மீது இயந்திரத் துப்பாக்கித் தாக்குதல் நடத்தியது ஆங்கிலேயப் படை. தங்கள் தலைவர் கானுக்குக் கொடுத்த வாக்குறுதிப்படி சீறிவந்த தோட்டாக்களை எதிர்கொண்டு மரணத்தைத் தழுவினர் அவருடைய தொண்டர்கள். ரத்தக்களரியான இடத்தில் 200-க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுக் கிடந்தார்கள். கடைசி வரை எதிர்வினையாக வன்முறை பக்கம் செல்லவில்லை. அப்போது மட்டும் இல்லை; எப்போதுமே தம் மீது திணிக்கப்பட்ட எல்லா வன்முறைகளிலும் தங்கள் உயிரைக் கொடுத்தும் அமைதியாகவே இருந்தார்கள் பஷ்தூனியர்கள். குறிப்பிட வேண்டிய இன்னொரு விஷயம், அதுவரை வீட்டுக்குள்ளேயே முடக்கப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான முஸ்லிம் பெண்களை அரசியல்மயப்படுத்தி களத்தில் முன்வரிசையில் நிறுத்தியது ‘குதாயி கித்மத்கார்’.
சிப்பாயின் செல்வாக்கு
காந்தியுடன் ஆத்மார்த்தமான, நெருக்கமான நட்பு கொண்டிருந்தார் கான். காங்கிரஸுடன் அவரது ‘குதாயி கித்மத்கார்’ இயக்கம் இணைந்து செயலாற்றியதுடன், காங்கிரஸிலும் உறுப்பினராக இருந்தார் கான். 1931-ல் காங்கிரஸ் தலைவர் பதவி தன்னைத் தேடிவந்தபோது, அதை நிராகரித்தார் கான். “நான் ‘குதாயி கித்மத்கா’ரின் ஒரு சாதாரண சிப்பாய். நான் எப்போதும் ஊழியம் செய்யவே விரும்புகிறேன்” என்றார். 1939-ல் உலகப் போர் தொடர்பான காங்கிரஸின் நிலைப்பாட்டை எதிர்த்தவர், இயக்கத்திலிருந்தும் விலகினார். பின்னர், போர்க் கொள்கையில் காங்கிரஸ் மாற்றம் மேற்கொண்ட பின்னரே, மீண்டும் அதில் இணைந்தார்.
1946 தேர்தலை பாகிஸ்தான் முழக்கத்தோடு எதிர் கொண்ட ஜின்னா முஸ்லிம்கள் பெரும்பான்மை வகித்த பெரும்பாலான இடங்களில் வென்றார். விதிவிலக்கு, கானின் செல்வாக்கு கொடிகட்டிப் பறந்த வடமேற்கு எல்லைப் பிராந்தியம்.
ஜின்னாவின் இந்தியப் பிரிவினைக் கோரிக்கையை ஆரம்பத்திலிருந்தே எதிர்த்தவர் கான். ஆனால், பிரிவினை தொடர்பான பேச்சுவார்த்தைகளின்போது, ‘குதாயி கித்மத்கார்’ விருப்பத்தை மீறி, அவர்களைக் கலந்தாலோசிக்காமலேயே பாகிஸ்தான் பிரிவினையை ஏற்றுக்கொண்டது காங்கிரஸ். தாள முடியாத வேதனையோடு, “எங்களை ஓநாய்களிடம் எறிந்துவிட்டீர்கள்” என்று கூறி வெளியேறினார் கான். காந்தியுடனான அவருடைய கடைசிச் சந்திப்பும் அதுதான்.
பாகிஸ்தான் உதயமான பின் ஜின்னாவுடன் இணைந்து பணியாற்ற அவர் தயாராகவே இருந்தார். தம் பகுதியை ‘பஷ்தூனிஸ்தான்’ என சுயாட்சிப் பகுதியாக அறிவிக்க வேண்டும் என்று கோரினார். ஜின்னா அவரது கோரிக்கையை நிராகரித்தார். மேலும், பஷ்தூனியர்கள் மாதிரியான தேசிய இனங்களை ஒடுக்கிப் பெரும்பான்மைவாதத்தின் கீழ் கொண்டுவரும் முயற்சிகளிலும் பாகிஸ்தான் இறங்கியது. அந்நாட்டு அரசு கடைசி வரை கானை ஒரு சதிகாரராகவே பார்த்தது. பாகிஸ்தானுக்குள் சிறுபான்மையினர் உரிமைகளையும் மதச்சார்பின்மையையும் பேசிய அவரை, முஸ்லிம்களின் எதிரியாகக் கட்டமைத்தது. அவருடைய பிற்கால வாழ்வின் பெரும் பகுதி வீட்டுச் சிறையிலோ நாட்டுக்கு வெளியிலோ கழிந்தது. 1988 ஜனவரி 20-ல் தன்னுடைய 97-வது வயதில் கான் காலமானார்.
பாகிஸ்தானின் பெரும் பிழைகள்
பாகிஸ்தானியர்கள் நினைத்திருந்தால், கானைத் தம் முடைய தேசத் தலைவராக வரித்துக்கொண்டிருக்க முடியும். பாகிஸ்தானின் மதச்சார்பற்ற முதல் தேசிய எதிர்க் கட்சியான ‘பாகிஸ்தான் ஆஸாத் கட்சி’யை அவரே உருவாக் கினார். கான் போன்றவர்களை ஒரு சமூகம் தோற்கடிக்கும் போது, அதற்கான விலை எவ்வளவு பெரியதாக அமையும் என்பதற்கு பாகிஸ்தான் எழுத்தாளர் ஃபரானாஸ் இஸ்பஹானியின் சமீபத்திய பேட்டியில் பதில் இருக்கிறது. அந்தப் பேட்டியில் கான் தொடர்பாக ஒரு வார்த்தைகூட இஸ்பஹானி குறிப்பிடவில்லை. ஆனால், வெயிலின் வெம்மை இயல்பாக மரங்களை ஞாபகப்படுத்திவிடுகிறது.
“1947-ல் பாகிஸ்தான் உருவானபோது முஸ்லிம்கள் அல்லாதோர் 23% பேர் இருந்தார்கள். இப்போது வெறும் 4%. முஸ்லிம்மயமாக்கலைத் திட்டமிட்டுச் செய்தது அரசு. பாடப் புத்தகங்களில்கூடப் பன்மைத்துவத்தை நிராகரித்தது. பாகிஸ்தான் என்றாலே முஸ்லிம்தான் என்ற அடையாளமே புகுத்தப்பட்டது. மொகஞ்சதாரோ, தட்சசீலம், சூபியிஸம் எல்லாம் புறக்கணிக்கப்பட்டன.
எங்கள் நாட்டின் முதல் ஜனநாயகத் தேர்தலே 1970-ல் தான் நடந்தது. முதல் பிரதமர் பூட்டோ தூக்கிலிடப் பட்டார். பேநசீர் தன் பதவிக் காலத்தை முடிக்க அனுமதிக்கப் படவில்லை. நவாஸும் தன் பதவிக் காலத்தை முடிக்க அனுமதிக்கப்படவில்லை. 2008-12 காலகட்டத்தில் தான் ஜனநாயகரீதியாகத் தேர்ந்தெடுக்கப் பட்டவர்கள் முதல் முறையாகத் தங்கள் பதவிக் காலத்தை நிறைவுசெய்தார்கள்.
பாகிஸ்தானிய மக்கள்தொகையில் 1% பேர்தான் இப்போது வரி செலுத்துகின்றனர். நடுத்தர வர்க்கம் என்ற ஒன்றே இல்லை. பணக்காரர்கள் - பரம ஏழைகள் அவ்வளவுதான். சிறுபான்மைச் சமூகத்தவர் மோசமான நிலையில் இருக்கின் றனர். ஷியாக்கள் படுகொலை தொடர்கிறது. இந்துக்கள், கிறிஸ்தவர்களில் யாரெல்லாம் இங்கிருந்து வெளியேற முடிந்ததோ அவர்கள் எல்லோரும் போய்விட்டார்கள். எங்கும் போக முடியாதவர்கள் மட்டுமே மிஞ்சியிருக்கிறார்கள். அவர்களுக்காகப் பரிந்து பேச ஆள் இல்லை. அரிதாகப் பரிந்து பேசும் எங்களைப் போன்றவர்கள் அச்சுறுத்தலினூடேதான் வாழ வேண்டியிருக்கிறது” என்கிறார் இஸ்பஹானி.
பிரிவினையால் இந்தியா, பாகிஸ்தான் இரு பகுதிகளுமே பாதிக்கப்பட்டாலும் இந்தியா இன்றைக்கு மீண்டெழக் காரணம் என்ன? இஸ்பஹானி சுட்டிக்காட்டும் காரணங்கள் இவை. “இந்தியா தேர்ந்தெடுத்த மதச்சார்பின்மை வழி! இந்தியா தேர்ந்தெடுத்த தாராளவாதம். இந்தியா தேர்ந்தெடுத்த நல்ல தலைமை!”
இந்தியாவுக்கு ஒரு பாடம்
இந்திய முஸ்லிம்கள் கவனிக்க வேண்டிய விஷயம் இது. முஸ்லிம்களுடன் நெருக்கமாக உறவாடுபவனாக ஒரு விஷயத்தைத் தொடர்ந்து கவனிக்கிறேன். இன்றைய முஸ்லிம் சமூகத்திடம் வெளிப்படும் மன அழுத்தம். நிச்சயமாக இன்றைய இந்தியர்கள் ஒவ்வொருவரின் தூக்கத்தைக் கெடுக்கவும் ஆயிரமாயிரம் சமூகப் பிரச்சினைகள் இங்கே இருக்கின்றன. அதிலும், சமூகரீதியான பாகுபாடும் புறக்கணிப்பும் திணிக்கப்படும் முஸ்லிம்களிடம் அந்த நெருக்கடி கூடுதல் வலியை உருவாக்குவது இயல்பானது. ஆனால், இந்தத் துயரங்களிலிருந்து எந்த அரசியல் மீட்டெடுக்கும்?
சுதந்திரத்துக்குக் கால் நூற்றாண்டுக்குப் பின், குறிப்பாக பாபர் மசூதி இடிப்புக்குப் பின் இந்திய முஸ்லிம் களின் அரசியலைத் தனதாக்கி உருவாகியிருக்கும் இயக்கங்கள் பலவும் இந்திய முஸ்லிம்களின் இயல்பான பாரம்பரிய அடையாளங்களைப் புறக்கணிப்பவையாகவே உருவெடுத்திருக்கின்றன. இந்திய முஸ்லிம்களின் தாராளவாதம், மதச்சார்பின்மை, பன்மைக் கலாச்சாரம், சீர்திருத்த மரபை உள்வாங்கிப் பிரதிபலிக்கும் அமைப்புகளாக அவை வளரவில்லை. மாறாக, மதத்தையும் ஒருமைக் கலாச்சாரத்தையும் நோக்கி மக்களைத் தீவிரமாக நகர்த்துபவையாக, பொதுச் சமூகத்திலிருந்தும் பொதுக் கலாச்சாரத்திலிருந்தும் மக்களை விலக்கி வெறும் முஸ்லிம் அடையாளத்தோடு அழைத்துச் செல்பவையாகவே அவை உருமாறியிருக்கின்றன. கிட்டத்தட்ட நேற்றைய பாகிஸ்தான் இயக்கங்களின் நீர்த்த வடிவத்தையே இன்றைய பாதையாக அவை காட்டுகின்றன. இத்தகைய மத அடிப்படையிலான அரசியல் தீர்வைத் தர முடியாது என்பதையே இன்றைய பாகிஸ்தான் சொல்கிறது.
வேறு யார் வழிகாட்ட முடியும்? யார் அந்த வழிகாட்டி? துரதிர்ஷ்டவசமாக இன்றைக்கு இந்திய முஸ்லிம்களின் முன் வெற்றிடம்தான் இருக்கிறது. அபாயகரமான அரசியல் வெற்றிடம். வஹாபியிஸத்தையும் ஐஎஸ்ஸையும் போட்டு குழப்பிக்கொள்ள வைக்கும் வெற்றிடம். இந்த நாட்டுக்கும் அவர்களுக்கும் இடையே ஒரு தொடர்பும் இல்லை என்பதைப் போலக் காட்டும் வெற்றிடம். இந்நாட்டின் வரலாற் றுக்கும் அவர்களுடைய முன்னோருக்கும் ஒரு தொடர்புமே இல்லை என்பதைப் போலக் காட்டும் வெற்றிடம். இந்திய முஸ்லிம்களின் வரலாறு, இந்நாட்டுக்கு அவர்கள் அளித் திருக்கும் பங்களிப்பு, இந்நாட்டின் சுதந்திரத்துக்கு அவர்கள் செய்திருக்கும் தியாகங்கள், இந்நாடு கொண்டாட வேண்டிய அவர்கள் இனத் தலைவர்கள், நம்பிக்கை தரும் அவர்களுடைய வாழ்க்கை எல்லாவற்றையும் இருட்டடித்துக் காட்டும் வெற்றிடம். எந்த ஒரு அழுத்தப்பட்ட சமூகத்துக்கும் தங்களுக்கான ஆக்கபூர்வமான, தாராளவாத அரசியலை உருவாக்கிக்கொள்ள வரலாற்றிலிருந்து ஒரு வழிகாட்டி தேவை. இன்றைக்கு இந்திய முஸ்லிம்களுக்கு பன்மைத்துவக் கலாச்சாரம், பாலினச் சமத்துவம், மதச்சார்பின்மை, தாராள வாதம், சுயசீர்திருத்தத்தை முன்னெடுத்த ஒரு வழிகாட்டி தேவை. கான் அந்த வெற்றிடத்தில் உட்கார எல்லா வகையிலும் தகுந்தவர். கான் இந்தியா கொண்டாட வேண்டியவர்!
- சமஸ், தொடர்புக்கு: samas@thehindutamil.co.in 

Thanks: Thehindu

Monday, January 18, 2016

ம அபரின் பண்பாட்டு வளர்ச்சியில் மகமதியர்களின் செல்வாக்கு

கிறித்தவமதம் தோன்றிய அறுநூற்றைம்பது ஆண்டுகளுக்குப்பின்தான் இஸ்லாம் என்னும் புதிய மார்க்கம் தோன்றியது.
கிறித்தவமதம் எல்லோரையும் ஆதாமின் பிள்ளைகள் என்று பகர்வது போலவே இஸ்லாமும் எல்லோரையும் ‘யா பனி ஆதம்’ என்று சொல் கிறது. திருக்குர் ஆன் உலகை நெறிப்படுத்துகிற புனித நூல்களில் ஒன்றாகும்.
pallivasaal 620
மதுரையின் அன்றாட வாழ்வில் இஸ்லாம் இரண்டறக் கலந்தது. ஒரு மதத்தின் மக்கள் பிறிதொரு மதத்தவரை மாமன் மச்சான் என்றும் அப்பா, பிள்ளை என்றும் உறவு பாராட்டி மகிழ்கின்றனர் என்றால் அது இந்துமதமும் இஸ்லாமும் காலங்காலமாகப் போற்றிவரும் பண்பாட்டு வெளிப்பாடாகும்.
இஸ்லாம் என்னும் மதம் இந்தியாவில் நுழை வதற்கு முன்பே இஸ்லாமியர்கள் மதுரைக்கு வந்தனர் என்பது தொன்ம நிகழ்வுகள்.
ஆதிகாலத்திலிருந்தே தமிழகத்தின் பொருள் வளங்களும் மக்களின் புதியன வாங்கும் ஆர்வமும் சோனகர் எனப்படும் அரபு வணிகர்கள், பாரசீக வளைகுடா வியாபாரிகளின் கவனத்தை ஈர்த்தன. சோனகரை யவனர் என்றும் தமிழ் நூல்கள் சிறப் பிக்கின்றன. யவனர் சந்தை இருந்ததாகவும் கூறு கின்றன.
அரபு வணிகர்களின் துணிகள், மற்றும் வாசனைப் பொருட்கள் மதுரைச் சந்தையை ஈர்த்ததுபோல சோனக மண்ணில் மதுரையின் முத்துக்களும் இடம்பிடித்தன.
நான்கு வர்ண மக்கள் வாழ்ந்த மண்ணில் நுழைந்த இஸ்லாமியர்களை ஐந்தாவது வர்ண மாகப் பார்த்தவர்கள் இவர்களை அஞ்சு வண்ணத் தார் என்றனர். இது ஒரு கருத்தாகும். ஆனால் இலங்கைத் தமிழ் அறிஞர் உனவஸ் இதற்கு வேறொரு பொருள் தருகிறார். பாரசீகத்திலிருந்து வந்த அஞ்சு வண்ணத்தார் பற்றி விளக்கும் போது “ஆசீம் வம்சம் (நபிகள் நாயகம் (ஸல் வம்சம்) பக்கிரி வம்சம் (அபுபக்கர் ரவிவம்சம்) பாரூக்கி வம்சம் (உமர் ரவி வம்சம்) உடையாவம்சம் (உதுமான் ரலி வம்சம்) இராணுவயுக்தர் (குதிரை ராவுத்தர் என்னும் குதிரை வணிகர்கள்) இவர்களே அஞ்சுவண்ணத்தார் என்று கூறுகிறார்.
அஞ்சு வண்ணம் குறித்த தரவுகள் எத்தகைய தாக இருந்த போதிலும் இலங்கை அறிஞரின் கருத்தே ஏற்புடையதாகத் தோன்றுகிறது.
மதுரைப் பாண்டியன் கூன் பாண்டியன் காஜிமார் தெருப் பள்ளி வாசல், கோரிப்பாளையம் தர்ஹா ஆகியவற்றுக்கு நிலமும் அரபுவணிகர் களுக்குக் குடியிருப்பும் அமைய உதவினான் என்பதிலிருந்தே, இஸ்லாமியர்கள் வரலாற்றுக் காலந்தொட்டே மன்னரோடும் மக்களோடும் இணைந்த வாழ்வையே வாழ்ந்தனர் என்பதை உணரலாம். சோழ மன்னன் ஒருவனும் உறையூரில் பள்ளி வாசல் அமைக்க உதவி இருக்கிறான் என்பதை திருச்சி கோட்டை ரயில் நிலைய முன்புறம் கி.பி.734 (ஹஜ்ரி 116-ல்) உள்ள கல்வெட்டில் காணலாம். கல்லுப் பள்ளி என்ற வழிபாட்டுத்தலம் இங்கே உள்ளது. சென்னை மயிலாப்பூர் தெப்பக்குளம் ஆற்காடு நவாபால் கொடுக்கப்பட்டது.
வணிகர்கள்
அரபு வணிகர்களின் வாசனைத்திரவியம் போன்ற பொருட்கள் மக்களை ஈர்த்தன. இது தவிர அரபு வணிகர்கள் குதிரை வணிகமும் புரிந்தனர். ஆனால் இறக்குமதியாகும் குதிரைகளை சேணம் போன்ற கருவிகள் இல்லாமலும் பழக்கத் தெரி யாமல் முரட்டுத்தனமாகச் சவாரி செய்ததாலும் குதிரைகள் இறந்தன. இதனால் மன்னர்கள் வணிகர் களான அரபிகளையே நியமித்தனர். இவர்களின் ஆற்றலும் வீரமும் கண்ட மன்னர்கள் குதிரைப் படைத் தலைவர்களாகவும் நியமனம் செய்தனர். மாலிக்காபூர் படை எடுப்பின் போது பாண்டிய மன்னரின் படையில் 3000 முஸ்லீம்கள் இருந்தனர்.
குதிரை வணிகர்களை மதுரை மக்கள் ராவுத்தர் என்று கூப்பிட்டனர்.
திருவிளையாடற் புராணம் 59’வது படலத்தில் குதிரைகளை ஓட்டிவந்த குதிரை வணிகர் தலைவர் ராவுத்தர்களைப் போல வெள்ளை ஆடையும் தலைப்பாகையும் தாடியும் கொண்டு வேடமிட்டு வந்ததைக் கூறுகிறது தமிழ்நாட்டின் ஆதிக்கோயில்கள், பலவற்றில் குதிரை ராவுத்தரின் சிலைகள் உள்ளன. திருப்பெருந் துறைக் கோவில் மண்டபக் குதிரைச் சிலையுடன் கூடிய மண்டபம் குதிரைராவுத்தர் மண்டபம் என்றும், கள்ளக் குறிச்சியில் திரௌபதி யம்மன் கோவில் வாசலிலும் தலைப் பாகை- தாடி யுடன் கூடிய சிலை முத்தியாலுராவுத்தர் என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது.
அருணகிரிநாதர் தனது கந்தரலங்காரம். கந்தர் கலிவெண்பா நூற்களில் முருகக் கடவுளை
“சூர்க் கொன்ற ராவுத்தனே!
மாமயிலேறும் ராவுத்தனே”
என்று வர்ணிக்கின்றார். இராவுத்தர் என்பது மேதகு என்னும் சொல்லைக் குறிக்கும்.
தொடக்கத்தில் யவனர் என்றும் பின்னர் இப்பெயர் மாறி முஸ்லீம்கள் என்றும் சோனகர் என்று பின்னாளிலும் அழைக்கப்பட்டனர்.
உலகளாவிய இஸ்லாமிய ஆட்சியாளர்கள் துருக்கியைத் தலைநகராகக் கொண்டு ஆண்டதால் ‘துருக்கர்’ என்று அழைக்கப்பட்டு, பின் மருவி துலுக்கர் என்று பேசப்பட்டனர்.
மரக்கலம் என்பது கப்பல்களையும் படகு களையும் குறிக்கும். மரக்கலத் தலைவர்கள் மரக்கல ராயர் என்றும் மரைக்காயர் என்றும் அழைக்கப் பட்டனர். மார்க்கப் என்பது மரக்கலத்திற்கான அரபு வேர்ச்சொல் ஆகும்.
இஸ்லாமிய வணிகர்கள் “லப்பைக்” என்று அடிக்கடி கூறிக் கொள்வார்கள். இதுவே ‘லெப்பை’கள் என்று மருவியது.
இஸ்லாமின் உயர்ந்த பண்பாட்டு நெறிகளில் நேசித்துப் பற்றுக்கொண்டவர்கள் பின்னர் இஸ்லாமிய மார்க்கத்திற்குத் தங்களை மாற்றிக் கொண்டனர்.
பதினெட்டுச் சித்தர்களில் ஒருவரான இராம தேவர் இஸ்லாத்தை ஏற்று மெக்கா சென்று வந்தார். தனது பெயரையும் யாஃகூபு என்றும் யாக்கோபு என்றும் மாற்றிக் கொண்டார்.
63 நாயன்மார்களில் ஒருவரான சேரமான் பெருமாள் நாயனார் விண்ணுலகம் சென்று தான் வழிபடும் கடவுளரான சிவன் பார்வதியை சேவித்து வந்தார் என்ற பெயர் பெற்றவர்.
பாஸ்கர ரவிவர்மன் என்ற பெயரில் கி.பி. 780 முதல் கி.பி. 834 வரை கோர மண்டலம் என்னும் சேர மண்டலத்தை ஆண்டவராவார். யானை ஏறா மாடக் கோவில்கள் அமைத்தவர் என்று இவரைப் பக்தி உலகம் பாராட்டும்.
இவர் இஸ்லாமியப் பெருமகனாரான நபிகள் நாயகம் அவர்களின் ஆற்றலைக் கேள்விப்பட்டு அரபு தேசம் சென்று இஸ்லாமியராக மாறியதாகத் தொன்மத் தகவல் ஒன்று உள்ளது.
இஸ்லாமியராக மாறிய சேர மன்னர் தனது பெயரை அப்துல் ரகுமான் சாமிரி என்று மாற்றிக் கொண்டாராம். அவருக்கு அரபு நாட்டின் ஸஃபர் ((ZAFAR)) என்னுமிடத்தில் “கபர்” இருப்பதாகவும் கல்வெட்டு ஒன்று சொல்கிறது.
அப்துல் ரகுமான் சாமுரி ஹஜ்ரி 212-ல் (கி.பி. 830) அங்கு வந்ததாகவும் ஹஜ்ரி 216-ல் (கி.பி. 834) இறையடி சேர்ந்ததாகவும் அதில் செய்தி உள்ளது.
ம ‘அபர்’ என்று அழைக்கப்படும் மாபார் என்ற சொல் மதுரையைக் குறிப்பதாகும். கொல்லத்தி லிருந்து நெல்லூர் வரை உள்ள கோர மண்டலப் பிரதேசத்தை ம’ அபர் என்று கூறுபவர்களும் உண்டு. இப்பகுதிகளின் வழியாகத்தான் பாரசீக வளைகுடா நாடுகளிலிருந்து வணிகர்கள் இந்தியா வந்தனர் இதுவே இந்தியாவிற்கான திறவுகோல் என்று யாத்ரீகர் வஸ்ஸாப் தனது நூலில் கூறு கிறார்.
மாலிக் இப்னுதீனார் தலைமையில் இஸ்லாமிய மதப் பரப்புக்குழு பாண்டிய நாட்டுக்கு வந்த போது கொடுங்களூர் பள்ளி இருந்தது. இது அப்துல் ரகுமான் சாமிரி என்ற பரஸ்கர ரவி வர்மன் கட்டியதாக வரலாறு கூறுகிறது.
இந்து தேசத்தின் முதல் பள்ளிவாசலாக கொடுங்காளூர் பள்ளிவாசல் பேசப்படுகிற பெருமை கொண்டது.
இதே போல் உலகின் முதல் பள்ளிவாசல் மதீனாவில் தோற்றுவிக்கப்பட்டது. அஸ்கர் அலி எஞ்ஜினியர் என்ற இஸ்லாமிய வரலாற்று அறிஞர் இப்பள்ளிவாசலின் தோற்றம் குறித்து இவ்வாறு குறிப்பிடுகிறார்.
“தீர்க்கதரிசி (முகமது நபி) பாதுகாப்புக் காரணங்கருதி நஜ்ஜர் குலக்குழு மக்களுக்கான இடத்தில் தங்கி இருந்தார்.
அது ஒரு தரிசு நிலம். ஒரு வேளை ஒரு பகுதியில் மட்டும் சாகுபடி செய்யப்பட்டிருக் கலாம். சில மரக்கூட்டங்களும் பேரீச்சை மரங் களும் அகற்றப்பட்டு கட்டட வேலை தொடங் கியது. தீர்க்கதரிசியின் (முகமது நபி)யும் இக் கட்டட வேலைகளைச் செய்தார்.
இக்கட்டடம் தான் முதல் மசூதி என்று முஸ்லீம் மரபில் கருதப்படுகிறது. இதைக் குறிக்கும் சொல் நபாட்டியன் மற்றும் ஸிரியன் வடிவில் மஸ்ஜித என்று வழங்கப்படுகிறது. இதற்கு மக்கள் கீழே விழுந்து வணங்குகிற இடம் அதாவது வழிபாடு செய்யும் இடம் என்று பொருள்.
இக்கட்டடத்தில் நீண்ட சதுர வடிவில் பெரிய முற்றம் ஒன்று இருந்தது. தீர்க்கதரிசியின் இரண்டு மனைவியருக்குமாக எல்லா நடவடிக்கைகளுக்கும் மையமாயிற்று. முஹம்மத் (நபி) தனது சமுதாய விவகாரங்களையும் பொதுக் கூட்டங்களையும் நடத்திய இந்த இடம் நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கவும் பயன்படுத்தப்பட்டது. ஏழைத் தோழர்கள் இரவில் படுத்து உறங்கினர்.
இஸ்லாமிய காலண்டர் ஆண்டு மெக்காவி லிருந்து தோழர் அபூபக்கருடன் மதீனாவிற்கு (குபா குடியிருப்புக்கு) சென்று சேர்ந்த நாளி லிருந்து தொடங்குகிறது.
அரேபியர்கள் அதுவரை தங்களுக்கென ஒரு ஆண்டுக்கணக்கினைக் கொண்டிருக்கவில்லை. தபரி ஜாஹிலிய்யா என்ற வரலாற்றறிஞர் இது குறித்து விளக்கும் போது,
“ஒரு பொதுவான தேதிக் கணக்கு முறை இல்லை எனில் மக்காவின் வர்த்தக நடைமுறை களில் குழப்பம்தான் ஏற்படும். தேவை என்று கருதிய போது கி.பி.622 ஜூலை 16-ஆம் தேதியை ஆண்டுத் தொடக்கமாக வைத்துக் கொண்டனர். அந்த நாளில் தான் முஸ்லீம்கள் மக்காவிலிருந்து மதீனாவிற்குப் புறப்பட்டுச் செல்லத் தொடங் கினார்கள். இந்த ஆண்டுமுறையில் தேதிகள் சந்திரமாத அடிப்படையில் கண்கிடப்பட்டு ஹஜ்ரி ஆக விளங்குகிறது.
மாலிக் இப்னு தீனாரைத் தொடர்ந்து காலந் தோறும் இஸ்லாமிய மதப்பிரச்சாரகர்கள் பாண்டிய நாடு வந்த வண்ணமிருந்தனர்.
காஜிதாஜுதீன் தலைமையிலான ஒரு குழு மதுரை வந்தது. இதன் மூலகாரணமாகக் கூறப் படும். ஜமாலுதீன் முப்தி அல் மாவ்ரி இவர் தான் மாபார் பகுதியின் நீதிபதியாகப் பணியாற்றியவர். இவர் தனது இரு மகன்களில் ஒருவரான ‘காஜி தாஜுதீனை’ மதுரைக்கு அனுப்பிவைத்தார்.
காஜி தாஜுதீன் கிருதமால் நதிவனமாக இருந்த மன்னரின் பொழுது போக்கு மண்டபத்தில் தங்கி இருந்தபோது மன்னரின் வீரர்கள் அவரை விசாரித்தனர். விவரம் கூறிய அவர் மன்னரின் வயிற்றுநோவைத்தான் குணப்படுத்துவதாகக் கூறினார். மன்னர் நேரடியாக வந்தபோது அவரை தாஜீதீன் குணப்படுத்தினார்.
இதனால் மகிழ்வுற்ற மன்னர் சுந்தரபாண்டியர் அவருக்கு அங்கேயே தங்கவும் மண்டபத்தை உரிமையாக்கிச் செப்புப் பட்டயம் வழங்கிய தாகவும் கூறுகின்றனர்.
இங்கு ஒரு தொழுகைத் தலம் கட்ட வேண்டும் என்பதை ஏற்று விரகனூர் கிராம வருவாயை இதற்காக மன்னர் ஒதுக்கீடு செய்து ஆணை யிட்டார். என்று பாண்டி நாட்டு வரலாறு நூலில் டாக்டர் எஸ்.ஏ.க்யூ ஹுசைனி கூறுகிறார்.
காஜி மஹல்லா என்று அழைக்கப்படும் காஜிமார் தெருவில் உள்ள இப்பள்ளி வாசல் மதுரையின் முதல் பள்ளி வாசல் என்னும் பெருமை கொண்டது. பாண்டிய மன்னனால் வழங்கப்பட்டு பின்னாட்களில் பள்ளிவாசலாக மாறிய இந்த மண்டபத்தின் தூண்களில் குலை தள்ளிய வாழை, தாமரை இதழ்கள், மீன் போன்ற அழகிய சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்துள்ளன.
இங்கு காஜிக்கள் தங்களை முகமது நபியின் நேரடி வாரிசுகள் என்று கூறிக் கொள்வதில் பெருமை கொண்டவர்கள் நபிகளின் வம்சத்தினரான ஆசிம்வம்சத்தினர் இந்தக் காஜிக்கள் என்பது ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மையாகும்.
மதுரையின் முக்கியமான காஜிமார் தெருவில் காஜிக்களுக்கு முன்பே ‘கூடுவாலா’ என அழைக்கப் பட்டவெல்லம் காய்ச்சுவோர் இருந்திருக்கின்றனர். மதத்தை வேரூன்றச் செய்ய வந்த காஜிக்களின் வருகை இவர்களை இடம்பெயரச் செய்து விட்டது. ஜரிகை வேலைப்பாட்டுத் தொழில் செய்யும் முஸ்லீம்கள் உள்ள தெரு ஜரிகைக்காரத் தெரு வாகும். இப்பகுதி இங்குதான் உள்ளது.
மன்னனால் நியமிக்கப்பட்ட காஜி தாஜுதீன் காலந்தொட்டு இன்று வரை மதுரை இஸ்லாமிய வரலாற்றில் காஜிமார் தெரு மிகவும் புகழ்பெற்றது.
பெரிய ஹஜரத் சின்ன ஹஜரத் என்பவர்கள் போதிப்பவராக இருந்து இஸ்லாமிய மார்க்கக் கல்வியை முறைப்படி கற்றுத் தந்து வருகின்றனர். மதுரை காஜிக்களிடம் படித்தவர்கள் வேலூர் பாக்கியாத் மதரஸாவைத் தொடங்கினார்கள்.
ஏனைய பகுதிகளில் ஜமாத் என்ற அமைப்பு இருந்து வருகிறது. ஜமாத்தார்கள் அப்பகுதியில் முஸ்லீம்களுக்கு இடையே நல்லது கெட்டது களுக்குப் பொறுப்பானவர்கள். ஆனால் காஜி மார் தெருவில் காஜியே நீதிபதியாக இருப்பதால் அதுவும் மன்னரே நியமித்ததால் ஜமா அத் என்று தனியாக இல்லை. நான்கு பேரைக் கொண்ட டிரஸ்ட் அமைப்பே கவனித்து வருகிறது.
காஜிக்களுக்கு அரசு மரியாதையும் உண்டு. தலைமைக் காஜியும் டவுன்காஜியும் காஜிமார் தெருவிலிருந்தே நியமிக்கப்படுகிறார்கள். மதுரையின் முக்கிய பள்ளி வாசல்களின் இமாம்கள் இக் காஜிமார் தெரு மார்க்கக் கல்வி படித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
நிக்காவர் என்னும் திருமணத்தை நடத்தி வைக்கும் உரிமை காஜிக்களுக்கே உண்டு. ஆங்கில அரசால் ‘காஜி சட்டம்’ கொண்டு வரப்பட்டுள்ளது அமுலில் உள்ளது.
காஜிமார் தெருவிலேயே காஜிக்கள் காதிரியா, ஷாஜுலியா என்ற பெயரில் இரண்டு அமைப்புக் களால் 4 நபர்கள் இப்பள்ளி வாசலை நிர்வகித்து வருகின்றனர்.
பொதுத் தேர்தல்களில் மதுரை மத்தியத் தொகுதியின் வெற்றியை இப்பகுதிதான் தீர்மானிக் கிறது என்னுமளவு வலிமையான வாக்கு வங்கி கொண்டது.
பாண்டிய மன்னன் மண்டபம் தொழுகைப் பள்ளிவாசலாக மாறிய பின் இந்த எட்டு நூற்றாண்டு களில் இதன் வடிவம் பொலிவடைந்து கொண்டே வருகிறது. வானுயர உயர்ந்த மினாராக்கள். தொழு மிடத்திற்கு முன்புறம் மேற்கில் இருந்து ஒலு செய் வதற்கான ஹவுஜ், இந்துக் கலாச்சாரப்படி இருந்தது. இஸ்லாமியக் கட்டடக்கலையின் அமைப்பில் பள்ளி வாசலின் நுழைவில் கிழக்குப் பக்கத்தில் ஒரு ஹவுஜும் கட்டப்பட்டுள்ளது.
காஜிதாஜுதீனின் கபர் எனப்படும் கல்லறை பள்ளி வாசலின் தொழுகைத் தளத்தை ஒட்டியே உள்ளது.
இஸ்லாமிய மதத்தின் முக்கிய அடையாள மாக காஜிக்கள் இருப்பதால் சமய நல்லிணக்க, சமாதான விழாக்களுக்கு அரசு அழைப்புகள் வழங்கப்படுகிறது. காஜிக்களின் சகிப்புத் தன்மைக்கு அடையாளமாக சோனையா கோவில், சாமியார் சந்து ஆகியவைகளும் உள்ளன. ரம்ஜான், மிலாது நேரங்களில் இப்பகுதி களைகட்டிக் கொண்டாட்டத் தோடு திகழும்.
கோரிப்பாளையம்
கி.பி. 12-ஆம் நூற்றாண்டில் சூபி ஞானிகள் மதுரை பாண்டிய மன்னன் கூன்பாண்டியனின் வெக்கை நோயைத் தீர்த்து நின்ற சீர் நெடுமாறனின் பேரன்பைப் பெற்றனர்.
சையத் சுல்தான், அலாவூதீன் அவுலியா, சையத் சுல்தான், சும்சுதீன் அவுலியா ஆகியோர் மன்னனின் துயரை மட்டுமல்ல மக்களின் நோய் களையும் தங்கள் ஆற்றலால் குணப்படுத்தினர். இவர்களின் பணிகளாலும் சேவைத் திறன்களாலும் ஈர்க்கப்பட்ட மக்கள் தாமாகவே இஸ்லாத்தின் இனிய நெறி முறைகளை ஏற்றுக்கொண்டு முஸ்லீமாக மாறினர். மதுரையின் மக்களான இவர்களின் தாய்மொழி தமிழாகவே இருந்தது.
இஸ்லாமியரின் கோட்பாடுகளையும் வாழ்வின் நெறி முறைகளையும் கண்டு வியப்புற்ற மன்னர்கள் இந்தச் சூபி ஞானிகளுக்குப் பள்ளி வாசல்களையும் தர்ஹாக்களையும் கட்டிக் கொள்ள நிவந்தங்களும் இறையிலி நிலங்களும் கொடுத்து அவர்களைப் போற்றினர்.
கூன் பாண்டியனின் படையின் தளபதியே முஸ்லீம்வீரர் தான் என்னுமளவு கௌரவப் படுத்தினர்.
சூபி ஞானிகளான இவர்கள் தமிழ் மண்ணில் ஆற்றிவரும் செயல்களில் விருப்புற்ற மன்னன் கூன் பாண்டியன் வைகை நதி வடகரையில் தாஹா ஒன்றைக்கட்டிக்கொள்ள நிலமளித்துப் பட்டய சாசனமும் வழங்கினான்.
அரசு மருத்துவமனை எதிரில் செல்லூர் சாலை வடபுறம் பெரும்பான்மையான மக்கள் வாழும் பகுதிதான் கோரிப்பாளையம் பகுதியாகும். அமெரிக்கன் கல்லூரி, மீனாட்சி அரசினர் மகளிர் கல்லூரி என்று பரபரப்பாகத்திகழும் கோரிப் பாளையம் தர்ஹா பள்ளிவாசல் மதுரை பற்றிய சுற்றுலா வரைபடத்தில் இடம் பெற்றுள்ளது. இஸ்லாமியரின் புனித சுற்றுலாத் திட்டத்தில் இக்கோரிப் பாளையமும் இடம் பெற்றுள்ளது.
பெரியதொரு மதில் சூழ்ந்த இத்தர்ஹா இரண்டு ஏக்கர் பரப்பளவைக் கொண்டது. இந்துக் கோவில்களின் வேலைப்பாடுகள் இதன் உள்ளும்புறமும் காணப்படுகின்றது. 70 அடி விட்டங்கொண்ட அரைக்கோள வடிவத்தில் மேற் புறமும் 20 அடி உயரம் கொண்ட உட்பகுதியும் உடையது.
கோரி எனப்படும் கூம்புவடிவமான பச்சை நிறத்தில் அமைந்த இத்தர்ஹாவின் விதானம் அழகும் நேர்த்தியும் உடையது. பச்சை நிறப் பள்ளிவாசல் என்பார்கள்.
இத்தர்ஹாவின் உட்புறம் சையத் சுல்தான் அலாவூதீன் அவுலியா. சையத் சுல்தான் சம்சுதீன் அவுலியா ஆகியோரின் சமாதிகள் உள்ளன. கல்லறைகளின் மேல் பச்சைத் துணியாலான போர்வை சாத்தப்பட்டு சந்தனமும் மல்லிகையும் இதன் மேல் அலங்காரமாகத் தூவப்பட்டிருக்கும்.
இதன் அருகே பாண்டியர் கல்வெட்டு ஒன்று சாசனமாக உள்ளது. இதன் வெளிப்புறத்தில் சிறு சிறு கல்லறைகள்போல மேடான பகுதிகள் உள்ளன.
மனநலம் குன்றியவர்கள் மதபேதமின்றி இங்கே வந்து சிகிச்சை பெற்றுக் குணமடைகின்றனர் என்பது நம்பிக்கையாகவே இருந்துவருகின்றது. மருத்துவர்களால் சாதிக்கமுடியாத, தீர்க்க வியலாது என்று கூறப்பட்டவர்கள்கூட இங்கே வந்து குணம் பெறுகின்றனர் என்று சொல்கின்றனர்.
கோரிப்பாளையம் தர்ஹா பள்ளிவாசலுக்கு கூன் பாண்டிய மன்னன் நிலம் கொடுத்தான் என்பது மதுரை வரலாற்றில் குறிப்பிடத்தக்க தகவலாகும்.
கிபி ஏழாம் நூற்றாண்டில் வழங்கப்பட்ட நிலம் தொடர்பான வழக்கு ஒன்று பல நூற்றாண்டுகள் கழித்து மதுரை நாயக்கர் மன்னர் வீரப்ப நாயக் கரின் அரசவையில் கோரிப் பாளையம் மூஸ்லீம் களால் தாக்கல் செய்யப்பட்டது.
“மன்னர் கூன்பாண்டியன் வழங்கிய நிலத்தை நாயக்கர்கள் உரிமை கொண்டாடுவதாலும். இதனால் யாத்திரீகர்கள் தர்ஹா வழிபாட்டுக்கு வர இயலாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறி” அரசனிடம் நீதி கேட்டனர்.
கி.பி. 1572 முதல் - 1595 முடிய 23 ஆண்டுகாலம் ஆட்சி செய்துவந்த வீரப்ப நாயக்கர் களவிசாரணை, ஆவணப் பரிசோதனைகள் மூலமாக இவ்வழக்கினை ஆராய்ந்து கோரிப் பாளையம் தர்ஹாவுக்குக் கூன் பாண்டியனால் விடப்பட்ட நிலம் முஸ்லீம்களுக்கே சொந்தமாகும் எனத் தீர்ப்புச் செய்து தானும் ஒரு ஆணையினைப் புதுப்பித்து வழங்கியதாகக் கோரிப் பாளையம் தர்ஹாவில் இன்றும் பராமரிக்கப்படும் கல்வெட்டுச் சாசனம் தெரிவிக்கிறது.
கழுவில் ஏற்றப்பட்டுக் கொடுமைப்படுத்தப்பட்ட சமணர்கள் தான் முதன் முதலில் இஸ்லாத்திற்கு மதம் மாறினார்கள் என்றும் பள்ளிகள் என்பது சமணர்களின் வழிபாட்டுத்தலம். இதிலிருந்து தான் பள்ளிவாசல் என்று பெயர் வந்ததாகவும் வரலாற்றுத் தரவுகள் கூறுகின்றன. தீண்டாமை ஒழிப்பில் பல நூற்றாண்டுகளாகத் தமிழகத்தில் இஸ்லாம் தனது பங்களிப்பைச் செய்து வருகிறது. இஸ்லாம் மூலம் சமுகப் பாதுகாப்பு கிடைப்பதாக மதம் மாறியவர் சொல்கின்றனர்.
இஸ்லாத்தில் மட்டும்தான் சாதி வித்தியாசமோ தீண்டாமை உணர்வோ கிடையாது என்பதை பிறமதத்தவரும் ஏற்றுக் கொண்டுள்ளனர். உயர் சாதியினரால் துன்புறுத்தப்படும் தாழ்த்தப்பட்ட வர்கள் இஸ்லாமில்தான் இணைகின்றனர்.
இஸ்லாமிய தர்ஹாக்கள் யாவும் உடல் பிணி, மனப்பிறழ்வு என்னும் மன நோய்களைத் தீர்க்கின்ற பள்ளிகளாக இருப்பது வியப்பிற்குரியது.
கி.பி. 1207-இல் மதினா நகரில் யர்புத் என்ற பகுதியிலிருந்து வந்த செய்யது இபுராஹும் என் பவர் இராமநாதபுரம் ஏர்வாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டார். யர்புத் என்பதே ஏர்வாடி என்று மருவிவிட்டது. இதேபோல மதுரை திரு வேடகம் அருகே உள்ள ஒரு தர்ஹாவும் மன நோயாளி களைச் சாந்தப்படுத்தி வருகிறது.
அன்னியப் படை எடுப்பில் குறிப்பிடத்தக்கது விஜய நகரப் பேரரசின் படைத்தலைவர் குமார கம்பணன் என்பவரின் படை எடுப்பாகும். மதுரையி லிருந்து சுல்தான்களைவென்று தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்த விஜய நகர மன்னரின் படைத் தளபதிக்கும் மதுரையின் சுல்தானாக இருந்த சிக்கந்தர் பாதுஷாவிற்கும் கடும்போர் மூண்டது.
சிக்கந்தர் பாதுஷா (கிபி 1195 - 1207) திருப் பரங்குன்றம் மலையில் தங்கி இருந்தபோது மரணமடைந்தார். அவர் மரணமடைந்த மலையி லேயே அவருக்குத் தர்ஹாவும் சமாதியும் கட்டப் பட்டுள்ளது.
இங்கு நாள்தோறும் நூற்றுக்கும் மேற் பட்டோர் வழிபாட்டிற்காக வந்து செல்கின்றனர். மனநலம் குன்றியவர்கள் இங்கு வந்து தங்கிக் குணம் பெற்று வருகின்றனர். மதுரையைச் சுற்றி யுள்ள இஸ்லாமியரும், அல்லாத மக்களும் இங்கே வந்து செல்கின்றனர். அண்மைக்காலமாக கேரளத்தி லிருந்து அதிகமானவர்கள் திருப்பரங்குன்றம் மலையில் உள்ள இந்தத் தர்ஹாவில் வழிபடவும் தொழுகை செய்யவும் வந்து தங்கிச் செல்கின்றனர் என்பது கூடுதல் தகவல். இங்கு நடக்கும் தீமிதி திருவிழாவிலும் அவர்கள் பங்கேற்கின்றனராம்.
தெற்குவாசல் மாஹ்வ் சுபஹானி முகைதீன் ஆண்டவர் தர்ஹாவும் பள்ளிவாசலும் மிகவும் புகழ்பெற்ற இஸ்லாமியர்களின் வழிபாட்டுத் தலமாகும்.
மாலை நேரங்களில் மந்திரிக்கவும், தாயத்துக் கட்டவும் நூறு பேர்கள் வரை குறிப்பாக இந்துக்கள் வரிசை கட்டிக் கொண்டிருப்பதைக் காணலாம். குழந்தைகளுக்கு சீர், கண்ணேறு ஆகியவைகள் குணப்படுத்தப்படுகின்றன.
இப்பள்ளிவாசலின் சந்தனக்கூடு திருவிழா அன்று அலங்கரிக்கப்பட்ட கப்பல் போன்ற அலங் காரத்தைக் காண மதுரை நகரில் அனைத்து மத மக்களும் நள்ளிரவிலும் கூடக் கூடி நின்று பார்ப்பது அதிசயமான ஒன்று ஆகும்.
ரஹ்மத் கூட்டுறவுப் பண்டக சாலை என்ற பெயரில் இப்பகுதி இஸ்லாமியர்கள் கூட்டுறவு சிறப்பங்காடிகளை நடத்தி வருகின்றனர். பள்ளி வாசலின் தென்புறம் ஒரு வாசகசாலையும் உள்ளது.
தகரப் பெட்டிகள், உண்டியல்கள், வாளிகள் என்று தகரம் சம்பந்தப்பட்ட தொழில்கள் இப் பள்ளி வாசலை ஒட்டி நடப்பதன்மூலம் இப்பகுதி முஸ்லீம்கள் இத்தொழிலைச் செய்து வருவது புலப்படுகிறது.
மாலிக் கபூரின் வெற்றியைத் தொடர்ந்து மதுரை பல்வேறு முஸ்லீம் மன்னர்களின் குடையின் கீழ் ஆளப்பட்டது. நகரமும் பல்வேறு மாற்றங் களைப் பெற்றுவர ஆரம்பித்தது.
பாவங்கள் எதுவும் இல்லாத அக்கால கட்டத்தில் மதுரைக்கு வர வைகை நதியைக் கடந்து வருவது ஒன்று தான் வழியாக இருந்தது. நகருக்குள் வருபவர்களிடம் நுழைவுவரி, சுங்க வரி வசூல் செய்யப்பட்டது.
தற்போதுள்ள சுங்கம் பள்ளிவாசலும் அதனை ஒட்டிய கட்டடங்களும் சுங்கச் சாவடியாக விளங்கியது. இன்றும் சுங்கம் பள்ளி வாசல் கட்டடம் பழமை வாய்ந்த நிலையில் காட்சி தருவதைப் பார்க்கலாம்.
சுங்கம் பள்ளிவாசல் தெருவில் இரும்பைத் தகடாகவும், பொருள்களாகவும் செய்யும் தொழிலே பெரும்பான்மையாக உள்ளது. மதரஸா, அன்ன தானம் என்று “அல்லாவின்” பணியில் சுங்கம் பள்ளிவாசல் மக்களுக்குத் தொண்டாற்றி வருகிறது.
இதன் அருகே மாநகராட்சியின் உமறுப் புலவர் மேல் நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. ஏறத்தாழ 6000 இஸ்லாமியக் குடும்பங்களைக் கொண்ட ஜமாத் ஒன்று இப்பள்ளிவாசலை இயக்கி வருகிறது. வக்புவாரியக் கல்லூரியின் பணி நிறைவு பெற்ற பேராசிரியர் பசீர் அகமது இப்பள்ளி வாசல் நிர்வாகிகளில் ஒருவர்.
தெட்சிண மாற நாடார் இந்து தர்மபரிபாலன சபை நடத்தும் நெல்பேட்டை, அரசு அங்கீகாரம் பெற்ற ஆடுவதைத் தொட்டில் உள்ள ஆட்டு மந்தைப் பொட்டல், வெற்றிலைப் பேட்டை, பாண்டிய மன்னர்களுக்கு ஆயுதங்கள் தயாரித்துக் கொடுத்த கொல்லம்பட்டறை சந்து ஆகியவை இப்பகுதியில் உள்ளன.
வைகைக் கரையோரம் உள்ள இச்சுங்கம் பள்ளி வாசல் பகுதியைச் சுற்றிலும் இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வாழும் கைமாராவுத்தர் தோப்பு உள்ளது.
மதுரை மேல மாசி வீதி நிலமதிப்பு அதிக முடைய பகுதியாகும். எலக்ட்ரானிக் பொருட்கள், மின்சாரக் கருவிகள். நைலான்பைப்புகள். நகைக் கடை என்று பரபரப்பான மேல மாசி வீதி செல்வச் செழிப்புமிக்க ஒரு வீதியாகும்.
நிறைய நிலபுலன்கள் உள்ள இஸ்லாமியர்கள் இந்துக்களுக்கான விழாக்கள். மீனாட்சி சுந்தர ரேசுவரர் தேரோட்டம் ஆகியவை சிறப்பாக நடை பெற ஒத்துழைப்பு தரும் விதத்தில் பரிவர்த்தனை முறையில் சற்றுத்தள்ளி தங்கள் வாழ்விடங்களை அமைத்துக் கொண்டனர்.
மேலவாசல் பள்ளிவாசல் இப்பரிவர்த்தனை மூலம் கிடைத்ததுதான். இந்துக்களின் மடங் களைப் போன்ற அமைப்பில் உள்ள இப்பள்ளி வாசலை ஒட்டி முஸ்லீம் குடும்பங்கள் உள்ளனர்.
“மார்கஸ்” என்று அழைக்கப்படும் இப்பள்ளி வாசல்தான் உலகம் முழுவதிலிருந்து மதுரைக்கு வரும் “தப்லிக்குகளை வரவேற்கவும் நகர் குறித்த விவரங்களைத் தரவும் நகரத்தில் உள்ள பள்ளி வாசல்களைப் பற்றிய விவரமும் எந்தப் பகுதிக்கு முக்கியத்துவம் தர வேண்டும் என்ற வழிகாட்டு தலையும் மேல மாசி வீதிப் பள்ளி வாசலே வழங்கு கிறது.
மதுரையை ஆண்டவர்களில் முஸ்லீம்களில் முதன்மையமாகக் கருதப்படுபவர் கான்சாகிப் என்ற மருதநாயகத்திற்கு முதலிடம் உண்டு.
கி.பி. 1759- 1764 ஆண்டுகளில் அவரால் உரு வாக்கப்பட்டது தான் கான் (சாகிப்) பாளையம், கான் சா(கிப்) மேட்டுத் தெரு, கோரிப்பாளையம் பின்புறமுள்ள கான் சா(கிப்) புரம், முதலிய தெருக்கள்.
மதுரை அவரது ஆளுகையின் கீழ் இருந்த போது மீனாட்சி அம்மன் கோவிலுக்குப் பல தானங்களைச் செய்து சிறப்பித்துள்ளார். தற் போது யானை, ஒட்டகம் கட்டும் லாயம், அதன் மேற்கூரை இஸ்லாமியக் கட்டடக் கலையாக இன்னும் இருக்கிறது. இவரால் தரப்பட்டது.
இந்துக்களோடு இணக்கமாகவே இருந்த கான் சாகிப் கல்லறை இருக்கும் தர்ஹாவும் பள்ளி வாசலும் மதுரை காளவாசல் பகுதி பின்புறம் சம்மட்டிபுரம் என்ற இடத்தில் உள்ளது.
மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே உள்ள தாசில்தார் பள்ளிவாசல் கி.பி. 1811-இல் கட்டப்பட்டது. மீனாட்சியம்மன் கோவில் நிர்வாகி யாகவும் தாசில்தாராகவும் இருந்த சையத் இஸ்மாயில் என்பவர் முயற்சியால் எழுப்பப்பட்ட பள்ளி வாசலுக்கு அவரைச் சிறப்புச் செய்யும் விதத்தில் தாசில்தார் பள்ளிவாசல் என்றே அழைத்தனர்.
மதுரையின் பல பகுதிகளில் தற்போது தொழுகைப் பள்ளி வாசல்கள் அதிகமாக உரு வாக்கப்பட்டுள்ளன.
கட்றா பாளையம், மகபூப் பாளையத்தில் உள்ள சுன்னத் வல்ஜமா அத் பள்ளிவாசல். ஓலைப் பட்டினம் காதர் கான் பட்லர் பள்ளிவாசல், இஸ்மாயில்புரம் நூர்தீன் பள்ளிவாசல், எஸ்.எஸ். காலனி மஸ்ஜித் அல் பிலால் (நலி).
எல்லீஸ் நகரில் உள்ள ஹஜ்ரத் நாயகி செய்யது அலி பாத்திமா புராதன தர்ஹா மிகவும் சிறப்புப் பெற்ற பள்ளி வாசல்களில் ஒன்றாகும். இதேபோல மேலக்கால் கணவாய் தர்ஹாவும் புகழ்பெற்றது.
பாண்டிய மன்னனின் ஆதரவோடு மதம் பரப்பி வந்த காஜிதாஜுதீனின் அரசவைக் கவிஞராக இருந்த பிராமணர் ஒருவர் நூர்தீன் எனப் பெயரை மாற்றிக் கொண்டார். இவருடைய சகோதரி மீனா காஜுதாஜீதீன் மீது மோகங் கொண்டு மதம் மாற்றிக் கொண்டு அவரை நிக்காஹ் செய்து கொண்டு விட்டதாகக் கூறுகின்றனர்.
இதனால் பிராமணர் குலத்தைச் சேர்ந்த சகோதரன் சகோதரியின் பெயரால் மீனா- நூர்தீன் என்ற பள்ளிவாசலை தெற்கு வெளி வீதியில் உருவாக்கப்பட்டது. என்றும் மீனா என்று அழைக்கப்பட்ட அப்பெண் பாண்டிய மன்னனின் மகள்தான் என்றும் கூறுகின்றனர்.
இப்போதுள்ள சப்பாணி கோவில் பேருந்து நிலையம் அருகே உள்ள மினா நூர்தீன் பள்ளி வாசலுக்கு சிவகங்கை அரசர்களான மருது பாண்டியர்கள் மானியங்கள் கொடுத்திருப்பதாக மருதுபாண்டியர் வரலாற்று நூல் ஒன்று கூறு கிறது. பிராமணர்கள் அதிகம் வாழ்ந்த இப்பகுதியில் இஸ்லாமியப் பள்ளிவாசல் உருவாக்கப்பட்டது என்பதைக் காணும்போது சமய நல்லிணக்கம் நிலவிய உண்மையைப் புரிந்துகொள்ளலாம். நூர்தீன் நபிகளின் மீது பொன்னரிய மாலை என்ற நூல் பாடியுள்ளார்.
ஏறத்தாழ பல நூற்றாண்டுகள்வரை மார்க்கக் கல்வியில் மட்டுமே ஈடுபட்டவர்கள் மெல்ல மெல்ல பொதுக் கல்விக்கு மாறி வருகின்றனர். பெண் கல்வி வளர்ச்சி என்பது இஸ்லாமியர் களிடையே பெரும் வளர்ச்சிபெற்று வருகிறது.
குழந்தை பிறப்பு, பூப்புனித நீராட்டுச் சடங்குகள், திருமணம் போன்ற நிகழ்ச்சிகளில் விசேஷமான நாட்களாகப் பெருமளவில் கடைப் பிடிக்கப்படுகின்றன.
குழந்தை பிறப்பையடுத்து 11வது நாளில் ‘ச்ஷில்லா என்னும் சடங்கும் 40’வது நாளில் ‘ச் ஷெட்டி’ என்னும் சடங்கும் நடத்தப்பட்டது.
பெண் பருவமடைதலின் போது உறவினர் களை அழைத்து தண்ணீர் ஊற்றும் வைபவம் நடக்கிறது. ஆடம்பரம் தற்போது அதிக அளவில் கடைப்பிடிக்கப்படுகிறது. இஸ்லாம் மதத்தில் தாய் மாமன் தந்தைக்கு சமமானவராகக் கருதப் படுவதால் மாமன் சீர்வழக்கம் முன்னாளில் இருந்ததாகத் தெரியவில்லை.
இஸ்லாமில் மணம் என்னும் நிக்காஹ் கொண்டாட்டம் ஒரு வாரம் வரை நீடிக்கும். மஞ்சள் தோள், ஹல்தி, கங்கன், நிக்காஹ், சுக்ரானா, வலிமா என்று சடங்குகள் நீளும், பிரியாணி, விருந்து தடபுடலாக நடக்கும்.
குர்பானி கொடுப்பதென்பது மார்க்க விதி முறைகளில் ஒன்றாகும். ஆடுகள் குர்பானியாகக் கொடுக்கப்பட்ட நிலை மாறி இப்போது ஒட்டகங்கள் கொடுக்கப்படுகின்றன. ரம்ஜான் என்னும் ஈகைத் திருநாளில் இந்துக்களை அழைத்து விருந்து வைக் கின்றனர்.
ரம்ஜான், பக்ரீத், போன்ற பெருநாள் விழாக்கள் நடக்கும் போது தொழுகையைத் தலைமை காஜி யாரே ஈத்கா மைதானத்தில் முன் நின்று நடத்து வார். குத்பா தொழுகை முடிந்து மஹல்லாவிற்கு காஜியார் ஊர்வலமாக அழைத்து வருவது கொண்டாட்டமாக இருக்கும்.
மதுரையில் இஸ்லாமியர்கள் தங்கள் வீட்டு விசேஷங்களுக்கு பெருவாரியாக இந்துக்களை அழைப்பதும் இந்துக்கள் திருமணங்களில் முஸ்லீம் இளைஞர்கள் மாப்பிள்ளைத் தோழராக இருப் பதுவும் ஆரோக்கியமான விஷயமாகும்.
அரசு அலுவலகங்கள் காவல்துறை போன்ற வற்றில் இஸ்லாமியரின் எண்ணிக்கை காத்திரமாக இல்லை. இஸ்லாமியரின் தொழில்கள் என்பது ஊதுபத்தி செய்தல், பாய் முடைதல், இரும்பு, எவர் சில்வர் பட்டறைகளில் கூலிவேலை, தகரத்தொழில், கட்டடத் தொழிலாளிகள், சவரத் தொழில், சலவைத் தொழில்கள் போன்றவைகளாக சமூக விஞ்ஞானிகள் ஆய்வாகக் கருத்துரைக்கிறார்கள்.
இஸ்லாம் மதம் ஞானிகளாலும் அறிஞர் களாலும் உருவாக்கப்பட்ட மதம்- அரசர்கள் எவரும் மதப் பரப்புரையோ, மதமாற்றங்களில் ஈடுபட்டதாகவோ வரலாறு அறவே கிடையாது. ஞானப் பாவியங்களும், சீறாப்புராணமும், சூபித்தத் துவங்களும் உலகிற்கு வழங்கிய ஞானவான்களின் மார்க்கம் என்று பிற மதப் பேராசிரியர்களே ஏற்றுக் கொள்கின்றனர்.
மகத்துவமான எழுத்தாளர் ஜுயாவுதீன், வாழும் படைப்பாளி எஸ்.அர்ஷியா, ஜே.ஷாஜகான். சிந்தனைச்சரம் முகமது பாகவி போன்றோரும் காந்தி மியூசியக் கவிதாயினி முனைவர் சபுரா பீவி அல் அமீன் ஆகியோர் பெயர் பெற்ற மதுரைச் சிந்தனையாளர்கள்.
கல்வி நலன் பேணுவதில் மதுரை வக்பு வாரியக் கல்லூரி, புதூர் அல் அமீன் மேல் நிலைப் பள்ளி, மதுரை இஸ்லாமியர் நடத்தும் கல்விச் சாலைகள் ஆகும். ஆங்காங்கே மதரஸா கல்வியும் கற்றுத்தரப்படுகின்றன.
பரபரப்பான அரசியலுக்குப்பெயர் பெற்ற மதுரை அரசியலில் இஸ்லாமியர் பங்களிப்பு அதிகம். மதுரை மத்திய தொகுதியில் உள்ள காஜிமார் தெரு, நெல்பேட்டை, முனிச் சாலை, மதுரை மேற்குத் தொகுதி கோரிப் பாளையம். மகபூப் பாளையம், பீபிகுளம் ஆகிய பகுதிகளின் வெற்றி தோல்விகளை இஸ்லாமியரே தீர்மானிக் கின்றனர் என்று தேர்தல் நேரக் கணிப்புகள் கூறுகின்றன.
மதுரை மக்களுக்கும் முஸ்லீம்களுக்குமான பண்பாட்டு உறவை இப்படிக் குறிப்பிட்டு விளக்கலாம்.
“பாபர் மசூதி, கோவை பெரிய மேடு குண்டு வெடிப்பு, குஜராத் பாதிப்பு என்று தேசத்தின் எல்லாத்திசைகளிலும் இரு மதங்களிடையே வெட்டுக்குத்துக்கள் நடந்தபோது “மதுரையில் மட்டும் மதங்களைவிட மண்ணும், மனிதநேயமும் பெரிது என்று இந்து முஸ்லீம்கள் அமைதியாக இருந்தனர். சமய நல்லிணக்க நகரல்லவா? அதனால்தான் இந்த சமத்துவநேச வெளிப்பாடு.”
தகவல் உதவியவர்கள்
பேரா-பசீர் அகமது, சுங்கம் பள்ளிவாசல், மதுரை. எழுத்தாளர் எஸ். அர்ஷியா.

Friday, January 15, 2016

தமிழர் பண்பாடு
முஸ்லிம்களின் பண்பாட்டு மாற்றங்கள்!
களந்தை பீர்முகம்மது

முஸ்லிம் சமூகம் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று இப்போது வரையறை இல்லை எப்படியும் இருந்துவிடலாம் என்றும் சொல்வதற்கில்லை! இரண்டுக்கும் இடையிலே சிக்கியுள்ளது. பொது வெளியில் கரைந்தபடியே தனித்தன்மையையும் பேணி வருகிறது. ஒரு சிறிய காலகட்டம்தான் மாற்றவர்களைக் கொண்டுவந்துள்ளது; இனி இதைத் தவிர்க்க முடியாதோ எனும் பதற்றமும் உண்டாகியிருக்கிறது.

உலகம் கிராமமாகச் சுருங்கி வந்த வேகத்தில் பல நல்லவை உதிர்ந்துபோய்விட்டன. வெளிநாட்டுப் பயணங்கள், வேலைவாய்ப்புகள் முஸ்லிம்களிடம் இரண்டுவிதமான தாக்கங்களை உண்டு பண்ணியுள்ளன. முஸ்லிம்கள் சிங்கப்பூர், அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் என்று வேலைகளின் நிமித்தம் பயணிக்கையில் அவர்கள் மேற்கத்திய மோகிகளாக, நுகர்வு வெறியராக, இஸ்லாமியக் கலாச்சாரங்களைக் கைவிடுவதில் தயக்கமற்ற மனிதராகத் திரும்புகிறார்கள். அவர்களுடைய வீடுகள் மேலைப் பண்பாட்டின் வாசனைக்குள் அமிழ்கின்றன. கால்களை முழுமையாக மறைக்க வேண்டும் என்னும் எண்ணமில்லாமல் பெர்முடாஸ் அணிந்து வெளிவருகிறார்கள். நடைப்பயிற்சி மேற்கொள்கிறார்கள். தாடி இல்லை; தொப்பி இல்லை. அவரைக் கோம்பை நாய்கள் வழிநடத்திச் செல்கின்றன. மனக்கிளர்ச்சிகள் இல்லாமல் நோன்பு பிடிக்கிறார்கள்; ஏழைகளின் பசியாற்றும் ஜகாத்தை முஸ்லிமின் கடமையாக நினைத்து வழங்குவதில்லை. தம் சொந்த இரக்க மனோபாவங்களைப் பொறுத்து தர்மங்கள் கொடுக்கிறார்கள். மாலையில் ஷாப்பிங் மால்களில், திரையரங்குகளில் சுற்றித் திரிகிறார்கள் தம் இளம் மனைவியருடன் - குழந்தைகளுடன்! இருந்தாலும் முக்கியமான விஷயம், ‘அல்லாஹ்’வை அவர்கள் மறக்கவில்லை.

பிறிதொரு சாரார் முஸ்லிம் நாடுகளுக்கே பயணிக்கிறார்கள். அரபு ஷேக்குகளின் மொழிகளைக் கற்கிறார்கள்; பிரமாண்டமான மசூதிகள் அவர்களின் உள்ளங்களையும் உடல்களையும் ஒருசேர ஆக்ரமிக்கின்றன. அரேபியப் பழங்குடி இனத்தின் கலாச்சாரத்தையே இஸ்லாமியக் கலாச்சாரமாகக் கருதி, சொந்த ஊருக்கு ஓடோடி வந்து தம் பெண்டு, பிள்ளை, அன்னையரையெல்லாம் கருப்புத் துப்பட்டாவால் உடல் முழுக்க மூடி மறைத்துவிட்டுப் பின்னரும் அரேபியா ஓடிச் செல்கிறார்கள். இன்னொரு குழு அதே வேகத்தில் அங்கிருந்து இங்கு ஓடிவருகிறது. “தொழுகைக்கு ஏது தொப்பி?” என்று வீசியெறிந்து விட்டுப் போகிறது; நோன்புக் காலத்தின் இருபது ரக்-அத் தொழுகையின் இடையிலே வந்து புகுந்து, இடையிலேயே நழுவிச் செல்கிறது. பள்ளி வாசலின் உள்ளே பயபக்தியாய், முழுமையான அமைதியாய் ஒரு பெருங்கூட்டம் ‘தராவீஹ்’ தொழுகையில் ஈடுபட்டிருக்க, இடையிலே வந்து புகுந்து இடையிலேயே அறுத்துக்கொண்டு வெளியேறிய இளைஞர்கள் பலரும் கலகலப்பாகப் பேசிச் சிரித்து விளையாடியவர்களாகப் பள்ளிவாசலையே கலாய்த்துக்கொண்டிருக்கிறார்கள். அரபு நாடு செல்லும் முஸ்லிம்களும் தத்தமது படிப்புக்கும் திறமைக்கும் ஏற்றபடி குளிரூட்டப்பட்ட அறைகளிலும் பாலைவனங்களிலுமாய் இருபிரிவுகளாக இருக்கிறார்கள். குளிரூட்டப்பட்ட அறைகளில் பெறப்படும் இஸ்லாம் அப்படியே பாலைவனத்திலும் பெறப்படுகிறது. ஆனால் வருவாய்ரீதியாக முஸ்லிம்கள் இங்கே இரு வகையாகிவிடுகின்றார்கள். என்றாலும் தமிழகம் திரும்பும்போது ஏதோ ஒரு அந்தஸ்து கருதி, இருவகையினரும் போட்டிபோட்டுக்கொண்டு ஒரே கலாச்சாரத்தையே பேசிக்கொண்டிருப்பார்கள்.

நாங்கள் பள்ளிக்கூடம் சென்றுவந்த நாட்களில் எங்கள் ஊரில் (ஒரு வசதி கருதி எங்கள் ஊர் என்று சொல்கிறேன். இதை அப்படியே ‘தமிழகம்’ என்பதாகப் புரிந்துகொள்ள வேண்டும். ஊருக்கு ஊர் பழக்க வழக்கங்கள், கலாச்சாரங்கள் மாறுபட்டும் உள்ளன.) ‘சமைஞ்ச பெண்களை’ப் பார்க்க முடியாது. ஜன்னல்கள் மூடிக்கொள்ளும்-நாம் அந்த வீட்டைக் கடந்து போகும்போது! ஒருவேளை வீட்டுக்குள்ளே செல்ல நேர்ந்தால் சமையலறைக்குள் சமைஞ்ச பெண் ஓடி ஒளிந்துகொள்வாள். எனவே பள்ளிக்கூடம் என்பது அவர்களுக்கு விலக்கப்பட்டிருந்தது. “இன்னொரு வீட்டிலும் அடுப்பூதத்தானே போகிறது. அப்புறம் எதற்குப் படிப்பு?” இது மலையேறிவிட்டது இப்போது. ஓரளவு வறுமையிலிருந்து மீளும் சக்தி இருந்தாலும், அந்தப் பெண் இன்று பள்ளிக்கூடம் செல்கிறாள். படித்த பெண்ணை மருமகளாய்க் கொண்டால் வம்புதான் என்று எண்ணியதுபோக, இப்போது அவள் வேலைக்குப் போவாள்தானே என்னும் எண்ணத்தில் வந்து நிற்கிறது. திருமணத்திற்கு முன்பும் பின்பும் அவரவர் தன்மைக்கும் வாழ்க்கைக்கும் ஏற்ற படி முஸ்லிம் பெண்கள் வேலைக்குச் செல்கிறார்கள். அநேகமாக வேலைக்குச் செல்லும் பெண்கள் புர்கா முறையை ஏற்றுக்கொண்டார்கள். ஆனால் அலுவலகங்களின் உள்ளே அது பாதியாகிவிடும். நகர்ப்புறக் கல்லூரி மாணவிகள் ஜீன்ஸ் பேண்ட் அணிந்து செல்வதும் இருக்கவே செய்கின்றது. இந்த மாணவிகள் சினிமாவிற்கு வரும்போது புர்கா அணிந்துகொள்கிறார்கள். எனவே, மாற்றுச் சமயங்களின் தோழிகள் பெருகிவிட்டார்கள். தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ் பண்டிகைகளில் முஸ்லிம் மாணவிகள் தோழிகளின் வீடுகளுக்குச் சென்று உற்சாகமாய்ப் பங்கெடுத்துக்கொள்கிறார்கள். தேர்வுகளிலும் சிறந்த மதிப்பெண்களைப் பள்ளி, கல்லூரிகள் அளவில் மட்டுமல்லாமல் மாநில அளவிலும் பெற்று ஒளிர்கிறார்கள். இதனால் முஸ்லிம் கல்வி நிறுவனங்கள் உற்சாகம் பெறுவதுடன், அந்த முஸ்லிம் மாணவியைத் தம் நிறுவனங்களுக்கும் அழைத்துக் கௌரவிப்பதுடன், அவருக்குப் பாடம் போதித்த இந்து-கிறித்தவ ஆசிரியர்களையும் பாராட்டிக் கௌரவிக்கிறார்கள்.

முஸ்லிம்களின் திருமண வைபவங்களிலும் பெரிய மாற்றங்கள் நிகழ்ந்துவிட்டன. இதர சமயத்தினர்போல் முஸ்லிம்களின் ‘நிக்காஹ்’கள் திருமண மண்டபங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளன. அதே சமயத்தில் முஸ்லிம்கள் தொகுப்பாக வாழும் கீழக்கரை, காயல்பட்டினம், மேலப்பாளையம் போன்ற பல ஊர்களில் வீடுகள் அல்லது மசூதிகளிலேயே திருமணங்கள் நிகழ்கின்றன. வீடுகள் வசதியாக இருப்பதுடன், தெருக்களில் போக்குவரத்தும் இருப்பதில்லை. இந்தப் போதுமான இடவசதிகள் கூட்டங்களைச் சமாளிக்க உதவுகின்றன. தெருக்களின் முக்கால் பகுதியை அடைத்துப் பந்தல் போட்டு அங்கேயே சாப்பாடு பரிமாறிக்கொள்கிறார்கள். காயல்பட்டினத்தில் நான்கைந்து ஜோடிகளுக்குச் சேர்த்து ‘நிக்காஹ்’ வைப்பதால் செலவினங்களையும் வீண் அலைச்சல்களையும் நேரவிரயத்தையும் தவிர்த்துக்கொள்கிறார்கள்.

முஸ்லிம்களின் வாழ்விடங்களுக்கு உள்ளேயே நிகழ்ந்த திருமணங்கள் முன்பு நள்ளிரவுகளிலும் நள்ளிரவு தாண்டிய அதிகாலைப் பொழுதுகளிலும் நடந்தன. பக்கத்து வீட்டினரைத் தவிர, முஸ்லிம் மஹல்லாவின் மற்ற வீடுகளில் அனைவரும் தூக்கத்திற்குள் விழுந்திருப்பார்கள். நிக்காஹ் நடக்கும் நேரத்தில் ஒவ்வொரு வீடாகச் சென்று கதவைத் தட்டித் தூக்கத்தில் இருப்போரை எழுப்புவார்கள். கதவைத் தட்டி அழைத்தபின் யாரும் தூங்குவதில்லை. தூக்கத்தை முறித்துவிட்டு மலர்ந்த முகமாகவே நிக்காஹ் வீட்டுக்கு வருவார்கள். அந்த இரவிலும் ஊர் சுற்றி மாப்பிள்ளையை அழைத்துவருவார்கள். நெருங்கிய உறவினர்களாய் அல்லது நண்பர்களாய் இருப்பின் ஊர்கோலமாய் அழைத்துவரப்படும் மணமகனுக்கு அவரவர் வீட்டு வாசல்களில் பசும்பால் கொடுப்பார்கள்; அவர் அதை மூன்றுமுறை உறிஞ்சிக்கொள்வார்; அங்கேயே மோதிரம் அணிவிப்பார்கள். பத்தமடையில் பெரும்பாலும் எல்லா வீடுகளிலும் கைத்தறித்துண்டு அணிவிக்கிறார்கள்.

முன்பு எங்கள் ஊர் நிக்காஹ்களில் நாதஸ்வரம்-தவில் என்று போட்டு முழக்குவார்கள். கால மாற்றங்கள், செலவு தவிர்ப்பு, அரேபியப் பயணங்கள், இஸ்லாமியப் பண்பாட்டு எழுச்சி என்று எல்லாம் சேர்ந்து நாதஸ்வரத் தவில் கலைகளை ஒரேயடியாக ஓரம்கட்டிவிட்டன. நள்ளிரவு - அதிகாலைத் திருமணங்களாய் இருந்தபடியால் இந்து-கிறித்துவ நண்பர்கள், அவர்கள் குடும்பத்தினர் திருமணங்களில் கலந்துகொள்ள வாய்ப்பே இல்லாமல் இருந்தார்கள்.

கீழக்கரையில் இப்போதும் இரவில் திருமணங்கள் நடப்பதாகக் கேள்விப்பட்டேன். தொண்ணூறு சதவிகிதத்திற்கும் மேற்பட்டு இப்போது தமிழகம் முழுவதும் பகல் திருமணங்களே நடக்கின்றன. மண்டபங்கள் என்பதால் எல்லாச் சமயத்தவரும் கலந்துகொள்கிறார்கள். மேலும் சைவ உணவுகளும் இப்போது வழங்குகிறார்கள். முஸ்லிம்கள் சைவ உணவுகளையும் பிராமணர்கள், பிள்ளைமார்கள் பிரியாணியையும் வெட்டுகிறார்கள். முன்பு நெய்ச்சோறு மட்டும்தான் இருந்தது. இன்று பிரியாணிக் கலாச்சாரம் மேலோங்கிவிட்டது. மதுரையில் வழங்கப்படுவது பிரியாணியா - பிரியாணியைப் போன்ற தோற்றமுடைய குஸ்காவா என்று புரியவில்லை. தாளிச்ச சாம்பாரும் தருவார்கள் அங்கு! கடந்த செப்டம்பர் மாதம் என் மகள் நிலோவ்னாவின் திருமணம் களக்காட்டில் நடந்தபோது, அசல் பிரியாணிக்குச் சாம்பாரும் ஏற்பாடு செய்துவிட்டோம்.
மேலப்பாளையம் திருமணங்களில் பிரியாணியோ நெய்ச்சோறோ கிடைக்கும் என்று போய்விட்டு ஏமாந்துவிட வேண்டாம். நல்ல அரிசியில் வெள்ளைச் சோறுதான் கிடைக்கும்! கொழுப்பு - இரத்த அழுத்தம்தான் காரணமாம். கறி ஆணம், சாம்பார், பருப்பு என்று தேவைப்பட்டால் அதுவே சைவம் அல்லது அசைவம் என்று சாப்பிட்டுக்கொள்ளலாம். முஸ்லிம்களின் திருமணத்திலும் வரதட்சணைகள் பாடாய்ப்படுத்துகின்றன. ரொக்கம் வேறு - நகை வேறு என்று இருந்த காலம், இப்போது நகைகள் மட்டும் என்னும் கட்டத்துக்குள் நுழைந்துகொண்டிருக்கிறது. அப்படியானால் ரொக்கம் ரத்தாகிவிட்டது என்று அர்த்தமல்ல. ரொக்கமே அதிகப்படியான தங்க நகைகளாக மாறியவாறு இருக்கின்றன என்று அர்த்தம். இப்போது முஸ்லிம்களிடையே பரவிவரும் தவ்ஹீத் வாதம், இளைஞர்கள் சிலரை எவ்விதமான வரதட்சணையையும் வாங்கவிடாமல் தடுத்திருக்கிறது. ஆடம்பரங்கள், நேர விரயத்தைக் கட்டுப்படுத்திவிட்டது. ஆனால் இந்த நேர விரயத்தை, தவ்ஹீத்வாதிகள் மேடையில் அரசியல்வாதிகளைப் போல் உரத்த குரலில் பேசிப் பேசியே ஈடுகட்டிவிடுகிறார்கள். (அதாவது, நம்முடைய பொன்னான பொழுதுகளில் இன்னும் கொஞ்சம் பிடுங்கிக்கொள்கிறார்கள்.)

முஸ்லிம்களிடையே உள்ள பிளவுகளை இப்போது பட்டவர்த்தனமாகக் காட்டிக்கொண்டிருப்பவை தர்ஹா கலாச்சாரம் சார்ந்த விஷயங்களே! இதை தர்ஹாச் சீரழிவு என்று கொதிக்கிறார் காயல்பட்டினம் கே. எஸ். முஹம்மத் ஷுஐப். அரேபியப் பண்பாட்டுப் படையெடுப்புதான் தமிழகத்தின் தர்ஹாக்களைக் குற்றுயிரும் குலையுயிருமாக ஆக்கிவிட்டது. சந்தனக் கூடு ஊர்வலங்கள் எந்தக் கடலில் போய்க் கரைந்தனவோ தெரியவில்லை. களக்காடு - ஏர்வாடியில் நடந்த சந்தனக்கூடு வைபவங்களுக்கு நாங்கள் குடும்பம் குடும்பமாகச் செல்வோம். ஏர்வாடியில் இருந்த ஆயிரத்துக்கும் குறையாத வீடுகள் ஒவ்வொன்றிலும் களக்காடு அல்லது அசலூர் உறவினர்கள் இருப்பார்கள். ஏர்வாடியின் நிறமே மாறிப்போயிருக்கும். ஊரின் அந்த ஈடு இணையற்ற கலகலப்பை இப்போதும் என்னால் வர்ணிக்க முடியாது. நபியின் பேரன்கள் ஹஸன்-ஹுஸைன் பெயரில் இரண்டு சந்தனக்கூடுகள் வெவ்வேறு திசைகளில் இருந்து ஆறாம் தெருவின் ஒரு முக்கியப் புள்ளியில் சந்திக்கும். அதுதான் உச்சக் கட்ட வைபவம். தெருவை அடைத்துக்கொண்டு மனித வெள்ளம். அந்த இரண்டு சந்தனக் கூடுகளும் சந்திக்கும் இடத்தில் - நேரத்தில் திடீரென்று சிலர் கம்புகளுடன் உள்ளே பாய்ந்து கோஷமிட்டவர்களாக அதைத் தடுப்பார்கள். பதிலுக்கு வேறு சிலர் அவர்களுடன் கைகலந்து விரட்டிவிடுவார்கள். பின்பு கூடுகள் சந்திக்கும்; இரண்டும் சேர்ந்து ஆற்றங்கரைக்குப் போகும்.

கம்புகளுடன் சிலர் கூச்சலிட்டபடி ஓடிவருவதும் அதை இன்னொரு கூட்டத்தார் தடுப்பதும் ஆண்டுதோறும் நடந்தபடியே இருந்ததால் அதை இந்த விழாவின் ஒரு சடங்கு என்றே கருதிக்கொண்டிருந்தேன். ஏற்கெனவே ஊரில் வள்ளித் திருமணம், சூரன்குத்து வைபவங்களையும் ஆண்டுதோறும் பார்த்துக்கொண்டிருந்த காலம். வள்ளிக்கு முருகன் தாலி கட்டப்போகும் சமயத்தில் ஒரு தும்மல் விழும். இப்படித் தும்மல் அபசகுனமாக விழுந்துவிட்டதே என்பதால் அந்தத் திருமணம் நடக்காமலேயே திருவிழா முடிந்துவிடும். இது போன்ற ஒரு சடங்கு என்றுதான் அந்தக் கம்பு விளையாட்டுகளும் என்று எண்ணியிருந்தால், உண்மை அதுவல்ல. அவர்கள் உண்மையாகவே இந்தச் சந்தனக்கூடுகளை இஸ்லாத்திற்கு ஆகாதது என்று கூறித் தடுக்கவே முயன்றிருக்கிறார்கள். தடுக்க முனைந்த அந்தச் சிலரே இப்போது நூறு, ஆயிரம், பல்லாயிரம் என்று பெருகிவிட்டார்கள். இப்போது கீழக்கரை ஏர்வாடியில், நாகூரில் நடக்கும் சந்தனக்கூடு வைபவங்களில் முன்பிருந்த கூட்டம் திரள்வதில்லை. காணிக்கைகள் வசூலாவதில்லை. (இந்த மாற்றம் அல்லது இதன் முழுத் தன்மைகள் குறித்து அறிய விரும்பும் ஒவ்வொருவரும் தோப்பில் முஹம்மது மீரானின் அஞ்சுவண்ணம் தெரு நாவலைக் கண்டிப்பாக வாசிக்க வேண்டும். வசீகரமான இன்னொரு பரிமாணத்தைத் தோப்பில் எட்டிப்பிடித்திருக்கும் படைப்பு அது.)

பல தர்ஹாக்கள் பொலிவிழந்துவிட்டன. தர்ஹா கலாச்சாரத்தின் வழியாக முஸ்லிம்களிடமிருந்து வேறு சில பண்பாட்டுக் கூறுகளும் கழன்றுபோயின. ஏதாவது ஒரு நேர்த்திக்கடனையொட்டி முஸ்லிம்கள் தங்கள் வீடுகளில் பாத்திஹா ஓதுவார்கள். அவரவர் வசதிக்கேற்ற பதார்த்தங்களைத் தயாரித்து, ஓதி முடித்ததும் அக்கம்பக்கத்தார் வீடுகளுக்கு அவற்றைக் கொண்டுபோய்க் கொடுப்பார்கள். அந்தப் பழக்கம் இப்போது அறவே இல்லை.

நோன்பின் 27ஆம் நாள் லைலத்துல் கத்ர் நாளாகும். குர்ஆன் மானுடகுலத்திற்கு முதன்முதலாக இறங்கிய நாளாக அது கணக்கிடப்படுகிறது. அந்த நாளிலும் பணியாரங்கள், அடைகள், பழங்களைக் கொண்டு பாத்திஹா ஓதுவார்கள். ஒவ்வொரு வீட்டிலிருந்தும் பிறவீடுகளுக்கு அவை வழங்கப்படுவதைப் போலவே, பிறவீடுகளில் இருந்தும் நமக்குப் பல்வேறு வகையான இனிப்பு வகைகள், கனி வர்க்கங்கள் கிடைக்கும். அன்றே 27 வகையான சமையல் வகைகள் செய்யப்படும். கூட்டாஞ்சோறு ஆக்கப்படும். முழுக்கவும் முஸ்லிம்களாகவே நிரம்பியுள்ள ஒரு தெருவைக் கற்பனைசெய்து பார்த்து, அதோடு இந்த நேர்ச்சைப் பரிமாற்றம், மனஸ்தாபம் இருந்தாலும்கூட அந்தக் குடும்பத்தினரைத் தவிர்க்காமல் அவர்களுக்கும் நேர்ச்சையை வழங்கி உறவுகளைப் புதுப்பித்துக்கொள்ளும் அந்தப் பொற்காலங்களைக் கண்ணில் மிதக்கவிட்டுப் பாருங்கள் - சில நொடிகளேனும்! ‘இஸ்லாமிய விழிப்புணர்ச்சி’ என்னும் பெயரின் கீழே போயே போய்விட்டன அந்த இனிமைகள்! அதை மீட்டெடுக்கும் இன்னொரு மாற்றுவழி இந்தச் சமூகத்திற்கு இன்றுவரை அருளப்படவே இல்லை.

இதே நிலைதான், இன்று இறப்பு நிகழ்ந்த வீட்டிலும்! ‘மய்யத்’தைக் கொண்டுபோய் அடக்கம் செய்த கையோடு, அடக்கம் செய்யப்பட்ட மய்யத்துக்கும் தமக்கும் ஒட்டுமில்லை, உறவுமில்லை என்று முஸ்லிம் சமூகம் ஒதுங்கிவிட்டது. இதனால் இறந்தவரின் பெயரால் முன்பு ஓதப்பட்ட 40 நாள் பாத்திஹா இப்போது இல்லை; விருந்துகள் இல்லை. இவை தவ்ஹீத்வாதிகளின் வருகையால் உண்டானவை. அதேசமயத்தில் தவ்ஹீத்வாதிகளின் செல்வாக்கிற்கு உட்படாதவர்களும்கூட இறந்தவர்கள் பெயரில் பாத்திஹாக்கள் ஓதுவதைக் கைவிட்டுவருகிறார்கள். சில பகுதிகளில் மூன்றாம் நாள் அல்லது ஏழாம் நாளில் உறவினரை அழைத்து, வசதியுள்ளவர்களாயின் ஊரை அழைத்துப் பெரும் விருந்து அளிக்கிறார்கள். நாற்பது நாள் பாத்திஹா ஓதுவது சிலருக்குப் பொருளாதாரச் சுமையாக இருப்பதாலோ அசௌகரியமான ஏற்பாடாக இருப்பதாலோ பாத்திஹா ஓதுதல் விடுபடக்கூடியதாக இருக்கலாம்.

கந்தூரி வைபவங்கள் முஸ்லிம்களின் இன்னொரு தனி அம்சம். இதுவும் தர்ஹாவின் இன்னொரு கலாச்சாரப் படிநிலை. ஊருக்கு ஊர் அரேபியக் கலாச்சாரப் பாதிப்புக்கு ஆளான தவ்ஹீத்வாதிகள் இருப்பதால் அவர்கள் கந்தூரி வைபவத்தை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை. இதனால் அவர்களுடைய வீடுகளிலிருந்து கந்தூரி வரிவசூலிக்க முடிவதில்லை. கூடுமானவரை கந்தூரி வைபவத்தை முடக்கவே விரும்புகிறார்கள். இருப்பினும் அதை முழுதாய் நிறுத்திவிட முடிவதில்லை.

காயல்பட்டினம் மஹ்லரா கந்தூரி விசேசமானது. பல ஊர்களில் இருந்தும் மக்கள் குழுமுவார்கள். கந்தூரிச் சோறு பெரிய பெரிய சஹன்களில் வைக்கப்படும். ஒவ்வொரு சஹனிலும் நான்கு பேர் சாப்பிடும் அளவுக்குக் கந்தூரிச் சோறு இருக்கும். இஸ்லாம் வலியுறுத்தும் சகோதரத்துவத்தைக் கடைப்பிடிக்கும்வண்ணம் அதில் அனைவரும் ‘எச்சில்’ என்னும் உணர்வு தோன்றாதபடிக்குக் கூடி உண்ணுவார்கள். மற்ற ஊர்களில் அது ஓலைப்பெட்டிகளில் வழங்கப்படுகின்றது.

ஒரு பள்ளிவாசல் - ஒரு ஜமாத் என்ற நிலை மாறி, பல பள்ளிவாசல்கள் பல ஜமாத்கள் என்றாகி முஸ்லிம் சமூகத்தின் ஒற்றுமை பங்கப்பட்டிருப்பது கண்கூடான உண்மை! பெருநாள் ஒரு நாள் என்று இல்லை; ஒரே ஊரில் ஒரே தெருவில் பெருநாள்கள் பல நாள்களாக நீடித்தபடியே போகின்றன. கால மாற்றங்களாலும் பொருளாதாரத் தாக்கங்களாலும் அரசியல் சூழல்களாலும் பல்வேறு சமூகத்தினரின் பண்பாடும் மாறிவருவது இயல்பானதுதான். ஆனால் முஸ்லிம் சமூகத்தின் பண்பாட்டு மாற்றங்களுக்கு மதமும் இந்த மண்ணில் சம்பந்தப்படாத வேறு சில காரணிகளும் துணையாய் இருக்கின்றன. இவை பிளவுபட்ட மனநிலையையும் வேடிக்கை மனோபாவங்களையும் தோற்றுவிக்கின்றன. இவற்றையெல்லாம் பார்க்கும்போது முஸ்லிமோ அல்லது மாற்றுச் சமூகத்தவரோ அழலாம்; சிரிக்கலாம்; விரக்தியடையலாம்; மனம் சோர்ந்துபோகலாம்! கொண்டாடலாம்! எல்லாவற்றுக்கும் வாய்ப்புகள் வழங்குகின்றன இந்தப் போக்குகள்!

பேரா. நத்தர்ஷா வீட்டுத் திருமணத்திற்குக் காரைக்கால் போய்விட்டு, என் வாழ்நாளில் முதன் முறையாக நாகூர் தர்ஹாவிற்கும் வேளாங்கண்ணி கோவிலுக்கும் சென்றுவந்தேன். அதற்கும் ஓராண்டுக்கு முன்பு என் சகலையின் அழைப்பின் பேரில் ஆத்தங்கரைப் பள்ளிவாசல் போயிருந்தேன்.

நாகூருக்கு நான் சென்றபோது காலை எட்டு மணி. ஆத்தங்கரைப் பள்ளிவாசலுக்கு நான் சென்றபோது மாலை ஐந்து மணி. காலையில் கூட்டம் குறைவான நிலை; மாலையில் கூட்டம் அதிகமான நிலை. இரண்டு தர்ஹாக்களிலும் முஸ்லிம்களுக்குச் சற்றேறக் குறைய நிலையில் மாற்றுச் சமூகத்தவர் கூடியிருந்தார்கள். குமரிமாவட்ட நாடார் சமூகத்தினர் நூற்றுக்கணக்கானோர் ஆத்தங்கரைப் பள்ளிவாசலின் முன் பெரியோரும் சிறியோரும் ஆண்களும் பெண்களும் குழந்தைகளுமாய்க் கூடியிருந்தார்கள். நேர்ச்சைகளைப் பெறப் பயபக்தியுடன் முண்டியடித்தார்கள்! குழந்தைகட்கும் ஊட்டினார்கள். எண்ணிக்கை குறைந்தாலும் உணர்வுகள் குறையாத நிலை நீடிக்கும் என்றே தோன்றுகிறது. நாம் தடுத்தாலும் தடுக்காவிட்டாலும் மாற்றங்கள் வரும்; வர வேண்டும்! அவை நம்மை வாழவைக்கவா தாழவைக்கவா என்பதுதான் நம் பெருங்கவலை.