Thursday, April 4, 2013

மேலக்கொடுமலூர் 
ஊர் பற்றிய தகவல்:


இக்கிராமம் முதுகுளத்தூர் தாலுகாவில், ராமநாதபுரம் மாவட்டத்தில் பரமக்குடி நகரிலிருந்து 16 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. இவ்வூர் மிகவும் பழம்பெருமை வாய்ந்தது என்பதை செப்பேடுகளில் உள்ள குறிப்புகளில் இருந்து அறிந்து கொள்ளலாம். இங்கு அனைத்து தரப்பு சமூகத்தினரும் சமூக நல்லிணக்கத்துடன் வாழ்ந்து வருகின்றனர். மேலும் இங்கு விவசாயம் பிரதான தொழிலாக விளங்குகிறது. இங்கு வசித்த பலர் தொழில் மற்றும் வேலைவாய்ப்பை முன்னிட்டு நகருக்கு சென்று, அங்கேயே நிரந்தரமாக தங்கி வாழ்ந்து வருகின்றனர்.

 குறிப்பாக இங்கு வசித்த முஸ்லிம்கள் முன்னேறு காலத்தில் பர்மாவில் வியாபாரம் செய்து,அதன் வருமானத்தில் வீடுகள் கட்டி, செல்வ  செழிப்புடன் வாழ்ந்து வந்தனர். இங்குள்ள பள்ளிவாசல் மிகுந்த பழமைவாய்ந்தது, அதன் நடுப்பகுதி 250 ஆண்டுகளுக்கு முன்பு கட்டியதாக நம்பப்படுகிறது. அதன் நடுப்பகுதியின் தூண்,மாடம்,சுற்றுச்சுவர் முற்றிலும் கற்களால் கட்டபற்றிப்பது வியத்தகு விசயங்களில் ஒன்று. இத்தூண்கலில் உள்ள பூ வேலைபாடுகள் ஒன்றைப்போல் மற்றொன்று இல்லாமல் இருப்பது அக்கால கட்டிட கலைக்கு ஒரு சான்று


Important web links :


No comments:

Post a Comment